[X] Close

சவுத்தி, ஜேமிசன் வேகத்தில் சரிந்த இந்திய வீரர்கள் - எளிய இலக்கை விரட்டும் நியூசிலாந்து

விளையாட்டு

WTC-Final-New-Zealand-Cricket-Team-needed-139-Runs-in-53-overs-to-win-the-Championship-against-India-in-England

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடி வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற வெறும் 139 ரன்கள் தேவைப்படுகிறது. இந்த போட்டியில் இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில்170 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி உள்ளது. அதனால் நியூசிலாந்து அணி சுலபமான இலக்கை விரட்டி வருகிறது. 53 ஓவர்களில் இந்த ரன்களை அந்த அணி எடுத்தால் போதும். 


Advertisement

இன்றைய ஆட்டத்தில் மட்டும் இந்தியா 8 விக்கெட்டுகளை இழந்துள்ளது. டிம் சவுதி, போல்ட், ஜேமிசன் மற்றும் வேக்னர் அந்த அணிக்காக விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதில் சவுதி 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். முதல் இன்னிங்ஸில் இந்தியா 217 மற்றும் நியூசிலாந்து 249 ரன்களை குவித்தது.  


Advertisement

Advertisement
[X] Close