Published : 01,Aug 2017 04:03 PM
கோவை சசிகுமார் கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது

இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கில் மேலும் ஒருவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்தாண்டு செப்.,22-ம் தேதி கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து தனிப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் கருமத்தம்பட்டியில் கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த சதாம் என்பவரை கைது செய்துள்ளனர். இவ்வழக்கு தொடர்பாக ஏற்கனவே சிலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சதாம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தித் தொடர்பாளராக இருந்த சசிகுமார் மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். இக்கொலையைக் கண்டித்து இந்து முன்னணியினர் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவையில் பூட்டப்பட்ட கடைகளை உடைத்து இந்து முன்னணியினர் அதிலிருந்த பொருட்களையெல்லாம் சூறையாடியது குறிப்பிடத்தக்கது.