Published : 13,Jun 2021 03:58 PM

சாலைகளில் பாதுகாப்புக்கு பெண் காவலர்கள் நிற்பதிலிருந்து விலக்கு - தமிழக டிஜிபி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலை அடுத்து, பெண் காவலர்கள் சாலைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டாம் என டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

ஆளுநர், முதலமைச்சர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் செல்லும் இடங்களில் பாதுகாப்பு பணியில் பெண் காவலர்களும் ஈடுபடுத்தப்படுகின்றனர். அவ்வாறு சாலைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும்போது, குடிநீருக்கும், இயற்கை உபாதைகளை கழிக்கவும் வசதியில்லாததால் பெண் காவலர்கள் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில், சாலைகளில் பாதுகாப்பு பணியில் வழிநெடுக பெண் காவலர்கள் காத்திருப்பதை தவிர்த்து, அவர்களுக்கு வேறு பணி வழங்க தமிழக காவல்துறைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதையடுத்து, சாலைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதில் இருந்து பெண் காவலர்களுக்கு விலக்கு அளித்து காவல்துறை டிஜிபி திரிபாதி வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்