Published : 28,Jan 2017 04:18 AM

கூட்டாக செய்தியாளர்களை சந்திக்கும் ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ்..!

Rahul-Gandhi-and-Akhilesh-yadav-Press-Meet

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் உத்தரப் பிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவும் ஞாயிற்றுக்கிழமை கூட்டாக செய்தியாளர்களை சந்திக்கவுள்ளனர்.

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் சமாஜ்வாதி கட்சியும், காங்கிரசும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. 403 இடங்களைக் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் 105 இடங்கள் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

முன்னதாக,‌ காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என்றும் ஷீலா தீட்சித் முதலமைச்சர் வேட்பாளர் என்றும் காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது கூட்டணி சேர்ந்துள்ளதால், வாக்காளர்கள் மனதில் உள்ள குழப்பத்தை அகற்ற, ராகுல் காந்தியும் அகிலேஷும் கூட்டாக பரப்புரை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்