குதிரை பேரத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 42 பேர் பெங்களூரு அருகேயுள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் சென்றுள்ள குஜராத் காங்கிரஸ் பொதுச்செயலாளர் நிஷித் வியாஸ் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.
குஜராத்திலிருந்து மாநிலங்களவைக்கு போட்டியிடும் காங்கிரஸின் அகமது படேலைத் தோற்கடிக்க பாரதிய ஜனதா சதி செய்து வருவதாகவும், அதனை முறியடிக்கவே எம்எல்ஏக்களை பெங்களூரு நகருக்கு அழைத்து வந்துள்ளதாகவும் வியாஸ் கூறியிருக்கிறார். ஏற்கனவே குஜராத்தில் காங்கிரஸைச் சேர்ந்த ஆறு எம்எல்ஏக்கள் கட்சியிலிருந்து விலகிவிட்டனர். பாஜக அரசு, ஆட்சி, பணபலம் மற்றும் அதிகார பலத்தை பயன்படுத்தி காங்கிரஸ் எம்எல்ஏக்களை இழுக்க முயற்சிப்பதாக அக்கட்சி குற்றம்சாட்டி வருகிறது.
இதனை குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி திட்டவட்டமாக மறுத்துள்ளார். தங்கள் கட்சி எம்எல்ஏக்கள் மீது காங்கிரசுக்கு நம்பிக்கை இல்லாததால் அவர்களை பெங்களூருவுக்கு அழைத்துச் சென்றுள்ளதாக விஜய் ரூபானி கூறியிருக்கிறார். இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் குழு தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தது. அந்த மனு தொடர்பாக, வரும் 31 ஆம் தேதிக்குள் குஜராத் மாநில தலைமைச் செயலாளர் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அனைத்து எம்எல்ஏக்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் ஆணையிடப்பட்டுள்ளது.
Loading More post
திருப்பதி கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - 4 கிமீ தூரம் நீளும் வரிசை
இன்று திறக்கப்படுகிறது முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் முழு உருவச் சிலை
பிரஷித், மெக்காய் பந்துவீச்சில் சரிந்த ஆர்சிபி விக்கெட்! ராஜஸ்தானுக்கு 158 ரன்கள் இலக்கு!
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா: நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்
``ஒரு வாரத்தில் ஊழலை வெளிக்கொணர்வோம்; 2 அமைச்சர்கள் பதவி விலக நேரிடும்”- அண்ணாமலை
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!