Published : 25,May 2021 01:09 PM

மீண்டும் விஜய் உடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்?

Keerthi-Suresh-is-starring-in-the-66th-movie-starring-Vijay

விஜய் நடிக்கும் 66-வது திரைப்படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நடிகர் விஜய் 'மாஸ்டர்' படத்துக்கு பிறகு நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக 'தளபதி 65' என பெயரிடப்பட்டுள்ளது. ஜோடியாக பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகியுள்ளார்.  இந்த படத்தை 2021 இறுதியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதால் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதன் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் முடிந்துள்ளது. கொரோனா பரவல் குறைந்ததும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை சென்னை, ஹைதராபாத், மும்பை ஆகிய பகுதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்த படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 66-வது திரைப்படத்தை தெலுங்கில் ‘ஓபிரி’, ‘மகரிஷி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி பைடி பல்லி இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் இந்த படம் தயாராக உள்ளதாகவும், இரு கதாநாயகிகளை கொண்ட கதை என்றும் கூறப்படுகிறது. அதில் ஒரு நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கீர்த்தி சுரேஷ் ஏற்கனவே பைரவா, சர்கார் படங்களில் விஜய் உடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்