Published : 28,Jul 2017 03:24 PM

மூன்று நிறுவனங்களின் பால் தரம் குறைந்தவை: ராஜேந்திர பாலாஜி அறிக்கை தாக்கல்

milk-quality-of-the-three-companies-is-low--Rajendra-Balaji-report

மூன்று தனியார் நிறுவனங்களின் பால் தரம் குறைந்தவை என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தா‌க்கல் செய்துள்ளார்.

மத்திய அரசின் ஆய்வகத்தில் பால் மாதிரிகளை சோதனை செய்ததில் ஆரோக்யா, விஜய், டோட்லா ஆகிய மூன்று நிறுவனங்களின் பால் தரம் குறைந்தவை என தெரிவந்துள்ளதாக அமைச்சர் தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் தரப்பு வழக்கறிஞர் விஜய் செய்தியாளர்களிடம் பேசும்போது, “தனியார் பால்களில் கலப்படம் உள்ளதை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சமர்பித்துள்ள ஆவணங்கள் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். தனியார் பால்களான ஆரோக்கியா, விஜய், டோட்லா ஆகியவற்றில் கலப்படம் இருப்பது உறுதியானது. அமைச்சர் தன் தரப்பு நியாயத்தை தெரிவித்ததை அடுத்து, எதிர்தரப்பு பதிலளிக்க வரும் செவ்வாய்க்கிழமை வரை நீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது” என்று தெரிவித்தார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்