Published : 28,Jul 2017 03:18 PM

இலங்கையுடன் டெஸ்ட்: வலுவான நிலையில் இந்திய அணி

Test-with-Sri-Lanka--The-Indian-team-in-strong-position

இலங்கை அணியுடனான முதல் டெஸ்ட்டில் 490 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற்று இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது.

காலேவில் நடைபெற்று வரும் போட்டியில் மூன்றாம் நாளான இன்று இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் ‌291 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஏஞ்சலோ மேத்யூஸ் 83 ரன்களும், தில்ருவன் பெரைரா ஆட்டமிழக்காமல் 92 ரன்களும் எடுத்தனர். ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், முஹமது ஷமி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இலங்கை அணிக்கு ஃபாலோ ஆன் வழங்காமல், இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை விளையாடியது. தொடக்க வீரர் தவான் 14 ரன்களிலும், புஜாரா 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மற்றொரு தொடக்க வீரர் அபினவ் முகுந்தும், கேப்டன் விராட் கோலியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தனர். அபினவ் முகுந்த் 81 ரன்களில் விக்கெட்டை இழந்தார். மூன்றாம் நாள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 76 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்