விழுப்புரம் மாவட்டம் ஒட்டனந்தலில் பட்டியல் சமூகத்தினரை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்விவகாரத்தில் 8 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவெண்ணெய்நல்லூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒட்டனந்தல் என்ற கிராமத்தில் வசிக்கும் பட்டியல் சமூக மக்கள் கடந்த 12ஆம் தேதி கோயில் திருவிழா நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். இதுகுறித்த புகாரில் விசாரணை நடத்திய காவல்துறையினர், பொதுமுடக்க காலத்தில் திருவிழா நடத்த அனுமதி மறுத்ததையொட்டி காவல்நிலையத்தில் மன்னிப்பு கடிதம் எழுதிக்கொடுத்துவிட்டு பட்டியல் சமூக மக்கள் ஊர் திரும்பியுள்ளனர்.
அப்போது, கூட்டப்பட்ட கிராம பஞ்சாயத்தில், விதிகளை மீறியதாக பட்டியல் சமூக மக்கள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அதில், மூன்று பேரை அழைத்து பிற சமூக மக்கள் முன்னிலையில் காலில் விழ வைத்து மன்னிப்பு கேட்ட வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், சம்பந்தப்பட்ட 8 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய 6 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
Loading More post
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
``எந்த வகுப்புக்கு எப்போது பள்ளி திறப்பு?”- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்
கோயம்பேடு சந்தை: பெட்ரோல், டீசல் விலை குறைவால் சரிந்தது தக்காளி விலை! இன்றைய நிலவரம் என்ன?
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!