Published : 27,Jul 2017 10:43 AM

சென்னை சென்ட்ரலில் ரயில்பெட்டியில் திடீர் தீ விபத்து

fire-broke-out-at-the-train-station-in-Chennai-Central

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 10-ஆவது நடைமேடையில் நின்றிருந்த ரயில் பெட்டியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து விரைந்து வந்த 20-க்கும் மேற்பட்ட தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டு தீயை துரிதமாக அணைத்தனர்.

தீ விபத்து ஏற்பட்ட ரயில் பெட்டியானது பயணிகள் ரயிலும் கிடையாது. சரக்கு ரயிலும் கிடையாது. எப்போதாவது ரயில் பழுதாகி நிற்கும் பட்சத்தில் அதனை செப்பனிட ஏதுவாக பொருட்கள் அடங்கிய ரயில் பெட்டிதான். இதனை டூல் வேன் என்று சொல்லுவார்கள். இந்த பெட்டியில்தான் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது.  தீ விபத்தில் மனிதர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. தீ விபத்து ஏற்பட்டுள்ள ரயில் பெட்டி நின்றிருந்த நடைமேடைக்கு வழக்கமாக பயணிகள் ரயில் எதுவும் வருவதில்லை. எனவே இந்த விபத்தால் பயணிகளுக்கு சிரமம் ஏற்படாது என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டூல் வேனில் இருந்த ஏராளமான பொருட்கள் தீயில் எரிந்துள்ளதால் சேத மதிப்பு கணக்கிடப்பட்டு வருவதாக ரயில்வே அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்