[X] Close

கொரோனா முதல் கடன் சுமை வரை: முதல்வராகும் மு.க.ஸ்டாலின் முன்நிற்கும் சவால்கள்!

தமிழ்நாடு,அலசல்

From-the-Corona-to-the-debt-Burden--challenges-front-of-chief-minister-M-K--Stalin--

தமிழக முதல்வராக முதன்முறையாக பொறுப்பேற்க இருக்கும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முன்பு இருக்கும் சவால்கள் என்னென்ன? - இதோ ஒரு விரைவுப் பார்வை...

தமிழகத்தில் மார்ச் இரண்டாவது வாரத்தில் இருந்து கொரோனா 2ஆம் அலை அதிகரிக்கத் தொடங்கியது. அதன்பின்னர் தினசரி பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்துவதே முதல்வராக பதவியேற்க இருக்கும் ஸ்டாலினின் முதல் கடமையாக இருக்கும்.

அதேபோன்று, ஆக்சிஜன் தட்டுப்பாட்டை சரிசெய்ய வேண்டியதும் முக்கியமானதாக உள்ளது. அடுத்தடுத்து விதிக்கப்படும் கட்டுப்பாடுகளால் கூலி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு புதிய அரசு என்ன மாதிரியான திட்டங்கள் எடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு இப்போதே எழுந்துள்ளது.


Advertisement

image

தமிழ்நாடு அரசின் கடன் சுமை சுமார் ரூபாய் 5.7 லட்சம் கோடியாக உள்ளது. சில பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. இதனை மீட்டெடுப்பதோடு தமிழக அரசின் கடனை அடைத்து, வருவாய் பெருக்கத்தை ஏற்படுத்த வேண்டியது மு.க. ஸ்டாலின் முன்பு நிற்கும் முக்கிய சவாலாகும். வேலைவாய்ப்புகளை அதிகரிக்க புதிய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கிறது. திமுக தேர்தல் அறிக்கையில் கூறியதுபோன்று, பெட்ரோல் - டீசல் விலை குறைப்புக்கு நடவடிக்கை, நீட் தேர்வு ரத்து செய்ய நடவடிக்கை போன்ற வாக்குறுதிகளும் நேரடியாக நிறைவேற்ற முடியாது என்பதால் முதல்வராக பதவியேற்க இருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு சவால்களாக முன்பு நிற்கின்றன.

நாளை காலை 9 மணிக்கு பதவியேற்பு விழா:

தமிழகத்தில் ஆட்சியமைக்குமாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் முறைப்படி அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து நாளை காலை 9 மணிக்கு முதல்வராக பதவியேற்க உள்ளார் மு.க.ஸ்டாலின்.

கிண்டி, சென்னை தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆட்சியமைக்க 118 தொகுதிகள் தேவை என்ற நிலையில், திமுக மட்டுமே 125 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. வெற்றியை அடுத்து திமுகவின் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

திமுக எம்எல்ஏக்கள் மற்றும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் என 133 பேர் ஆதரவு அளித்தனர். திமுக சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட மு.க.ஸ்டாலின், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். அப்போது எம்எல்ஏக்கள் கையெழுத்திட்ட ஆதரவுக் கடிதத்தை அவர் அளித்தார். அப்போது திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோரும் உடனிருந்தனர்.

image

ஆட்சியமைக்க உரிமை கோரியதைத் தொடர்ந்து ஆளுநர் அதை ஏற்றுக்கொண்டார். ஆளுநரின் செயலாளர் ஆனந்த்ராவ் படேல், ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலின் இல்லத்தில் அவரை சந்தித்து அழைப்பு கடிதத்தை அளித்தார். இருவரும் சுமார் 20 நிமிடங்கள் பேசினர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக முதலமைச்சராக நாளை மறுநாள் பதவியேற்கிறார். மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்பு விழா வெள்ளியன்று காலை 9 மணிக்கு, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close