Published : 26,Jul 2017 01:47 PM

வியாபம் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மேலும் ஒருவர் தற்கொலை

One-more-committed-suicide-in-the-corruption-case

மத்தியப் பிரதேசத்தில் வியாபம் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மேலும் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

வியாபம் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பிரவீன் யாதவ் மத்தியப் பிரதேசத்தின் மொரேனா பகுதியில் தூக்குப் போட்டு‌த் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வியாபம் வழக்கில் பிரவீன்‌ மீது கடந்த 2012ல் வழக்குப் பதிவு‌ செய்யப்பட்டது. வியாபம் முறைகேடு வெளிச்சத்துக்கு வந்ததிலிருந்து இதுவரை வழக்கில் தொடர்புடைய 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ‌ இ‌தி‌ல்‌, குற்றம்சாட்டப்பட்டவர்களும் வழக்கின் முக்கிய சாட்சிகளும் அடங்குவர். இந்த வழக்கு தொடர்பாக புலனாய்வில் ஈடுபட்ட ஊடகவியலாளர் ஒருவரும் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

மத்தியப் பிரதேச அரசுப் பணிகளுக்கு தேர்வு நடத்தும் அமைப்பான வியாபம் நடத்திய 13 தேர்வுகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக வழக்குகள் பதிவு‌ செய்யப்பட்டுள்ளன. முறைகேடுகள் குறித்து தகவல்கள் 2000 ஆம் ஆண்டு முதலே வெளிவந்தன. ஆனால் 2009 ஆம் ஆண்டுக்கு பிறகே இதுகுறித்து விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்