[X] Close

செங்கல்பட்டு: 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 3 பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழப்பு

தமிழ்நாடு

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தை அடுத்துள்ள காத்தான்கடை அருகே அரசுப் பேருந்தும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.


Advertisement

image

மேல்மருவத்தூர் ராமாபுரத்தில் இருந்து கல்பாக்கத்தில் நடந்த நிச்சயதார்த்த விழாவிற்கு சென்ற தனியார் பேருந்தும், சென்னையில் இருந்து புதுச்சேரிக்குச் சென்ற அரசுப் பேருந்தும் கல்பாக்கம் அருகே உள்ள காத்தான்கடை என்ற இடத்தில் நேருக்கு நேராக மோதிக் கொண்டது.


Advertisement

image

இந்த விபத்தில் தனியார் பேருந்தில் பயணம் செய்த 3 பெண்கள் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த இரண்டு பேருந்துகளின் ஓட்டுநர்கள் உட்பட 6 பேர் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Advertisement

Advertisement
[X] Close