[X] Close

திரிபுராவில் பரபரப்பு; 31 கொரோனா நோயாளிகள் கேர் செண்டரிலிருந்து தப்பியோட்டம்!

இந்தியா

31-Covid-Positive-Patients-Flee-From-Tripura-Care-Centre-Search-On

திரிபுராவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட வெளிமாநிலத்தை சேர்ந்த 31 கொரோனா நோயாளிகள் சிகிச்சை மையத்தில் இருந்து தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement

திரிபுரா மாநிலத்தில், மாநில ரைபில்ஸ் பாதுகாப்பு படைப்பிரிவில் ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்பதற்காக உத்தரப்பிரதேசம், பீகார், ராஜஸ்தான், மத்தியபிரதேசம், மேற்குவங்காளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் மேற்கு திரிபுரா மாவட்டத்திற்கு வந்திருந்தனர். மாநிலத்திற்குள் வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், உத்தரப்பிரதேசம், பீகார், ராஜஸ்தான், மத்தியபிரதேசம், மேற்குவங்காளம் உள்ளிட்ட வெளிமாநிலங்களை சேர்ந்த 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

image


Advertisement

இதையடுத்து, அவர்கள் அனைவரும் மேற்கு திரிபுரா மாவட்டத்தின் அருந்ததி நகரில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கொரோனா பாதிக்கப்பட்ட வெளிமாநிலங்களை சேர்ந்த 31 பேரும் நேற்று சிகிச்சை மையத்தில் இருந்து தப்பியோடி விட்டனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய வெளிமாநில கொரோனா நோயாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். தப்பியோடியவர்கள் அனைவரும் திரிபுரா மாநிலத்தை விட்டு வெளியேறியிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். 


Advertisement

Advertisement
[X] Close