கேரளாவில் ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடையவர் கைது

Kerala-IS---Arrested-with-the-organization

ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடையதாக கருதப்படும் கேரள மாநிலத்தவர் ஒருவர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார். 


Advertisement

துருக்கியில் இருந்து நாடு திரும்பிய அவரை, உளவுத்துறை தகவலின் பேரில் டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் டெல்லி மற்றும் கேரள காவல்துறையினர் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். கேரள மாநிலத்தைச் சேர்ந்த அந்த நபர், ஈராக்கில் ஐ.எஸ் அமைப்புடன் இணைந்து செயல்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதேபோல், கேரள மாநிலத்தைச் சேர்ந்த 6 பேர் சிரியாவில் ஐ.எஸ் அமைப்புடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். ஈராக்கில் கடத்தப்பட்ட இந்தியர்கள் குறித்து கைது செய்யப்பட்டவரிடம் விசாணை நடைபெற்று வருகிறது.
 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement