சென்னை மேற்கு சைதாபேட்டையில் அடுக்குமாடி குடியிருயிருப்புகளின் 7 வீடுகளைச் சேர்ந்த 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால், அந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை செய்யப்படுகிறது. 14 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதியில் தடுப்பு போடப்படுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டிருக்கும் சூழலில், மாநிலம் முழுவதும் புதிய கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. கொரோனா பரிசோதனையும் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையிலுள்ள ஒரே பகுதியின் அடுக்குமாடி குடியிருப்புகளில் தொற்று தீவிரமாகப் பரவி இருப்பது கவனிக்கத்தக்கது.
இதனிடையே, 'சென்னையில் பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும். மாஸ்க் அணியாவிட்டால் ரூ.200 அபராதம். வணிக வளாகங்கள், சலூன்கள், ஜிம் உள்ளிட்ட இடங்களில் விதிகளை பின்பற்றாவிட்டால் ரூ.5000 அபராதம் விதிக்கப்படும்' என்று சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Loading More post
தீவிரமடையும் கொரோனா இரண்டாம் அலை: பிரதமர் மோடி 8 மணிக்கு அவசர ஆலோசனை!
கணினியுடன் வாக்கு எண்ணும் மையத்திற்குள் சென்ற 3 நிபுணர்கள் யார்? - முக.ஸ்டாலின் ட்விட்
விடைபெற்றார் விவேக்... காவல்துறை மரியாதையுடன் உடல் தகனம்
காவல்துறை மரியாதையுடன் தொடங்கியது நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலம்!
விவேக் இறப்புக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பில்லை - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி
"விவேக்... உண்மையான ஹீரோ!" - ரஜினி முதல் சூரி வரை... திரைக் கலைஞர்களின் புகழஞ்சலி