'கேப்டன் 7' என்ற டைட்டிலில் அனிமேஷன் தொடர் ஒன்றை தயாரிக்கிறார் எம்.எஸ்.தோனி .
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ,'கேப்டன் 7' என்ற டைட்டிலில் புது அனிமேஷன் தொடர் ஒன்றை தயாரிக்கவுள்ளார். பல ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் தோனி இந்த 7 எண் பதித்த ஜெர்சியை அணிந்திருந்தார். உளவு தொடரான இந்த ‘கேப்டன் 7’ தற்போது ப்ரீ புரொடக்ஷன் பணிகளில் இருக்கிறது.
இந்தத் தொடரின் முதல் சீசன், இந்தியாவின் முன்னாள் கேப்டனை அடிப்படையாகக் கொண்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனியின் தயாரிப்பு நிறுவனமான தோனி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் மற்றும் பிளாக் ஒயிட் ஆரஞ்சு பிராண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றின் ஒரு கூட்டு முயற்சிதான் 'கேப்டன் 7' என்று தெரிவித்துள்ளார் சாக்ஷி.
இந்தியாவின் முதல் கற்பனை கதை கலந்த உளவு அனிமேஷன் தொடர் எனக் கருதப்படும், இந்த தொடர் அடுத்த ஆண்டு முதல் சீசனுடன் தொடங்கவிருக்கிறது. இதுகுறித்து சாக்ஷி தோனி கூறுகையில், 'கேப்டன் 7' சாகசங்கள் நிறைந்த ஒரு நிகழ்ச்சியாக இருக்கும். இந்த தொடர் உலகம் முழுவதும் உள்ள ஆன்லைன் ஓடிடி தளங்களில் வெளியாகும்' என்றார்.
Loading More post
கெஜ்ரிவால் 'நேரலை' சர்ச்சை: பிரதமர் கண்டிப்பு; வருத்தம் தெரிவித்த டெல்லி முதல்வர் அலுவலகம்
தமிழகத்தில் 13,000-ஐ தாண்டியது ஒருநாள் கோரோனா பாதிப்பு - 78 பேர் உயிரிழப்பு
'ஒரே நாடு' என்ற உணர்வுடன் பணியாற்றுவோம்: மாநிலங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
பிற மாநிலங்களுக்கும் உதவும் ஒரே ஆக்சிஜன் உபரி மாநிலம்! - 'கேரள மாடல்' சாத்தியமானது எப்படி?
எந்த மருத்துவமனையில் எவ்வளவு படுக்கை வசதிகள்?- முழு விவரத்தை சொல்லும் தமிழக அரசின் வலைதளம்
ஆக்சிஜன் பற்றாக்குறையால் திணறும் டெல்லி: அதிர்வூட்டும் பின்புலமும் கள நிலவரமும்!
ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால்..? - உச்ச நீதிமன்ற யோசனையும், தமிழக அரசின் வாதங்களும்
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை