நடிகை நிவேதா தாமஸுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படடுள்ளதை நிவேதா தாமஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். அதில், “எனக்கு கொரோனா பாஸிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால், தனிமைப்படுத்திக் கொண்டேன். மருத்துவர்களின் ஆலோசனையை சரியாக பின்பற்றி வருகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துவந்த நடிகை நிவேதா தாமஸ் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘நவீன சரஸ்வதி சபதம்’ படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடித்தார். அதனைத்தொடர்ந்து, விஜய்யின் ‘ஜில்லா’, ’த்ரிஷ்யம்’ தமிழ் ரீமேக்கான கமல்ஹாசனின் ‘பாபநாசம்’, ரஜினியின் ‘தர்பார்’ படங்களில் நடித்து கவனம் ஈர்த்தார். தற்போது, ‘பிங்க்’ தெலுங்கு ரீமேக்கான ‘வக்கீல் சாப்’ப்பில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
நிவேதா தமாஸ் நடித்துள்ள ’பிங்க்’ தெலுங்கு ரீமேக் ’வக்கீல் சாப்’ வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனாவின் இரண்டாவது அலை தொடர்ந்துள்ள நிலையில் பொதுமக்கள், பிரபலங்கள் என பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சமீபத்தில்தான், சினிமா துறையைச் சேர்ந்த சூர்யா, லோகேஷ் கனகராஜ், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுகல்கர் ஆகியோர் கொரோனாவல் பாதிக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
Loading More post
தீவிரமடையும் கொரோனா இரண்டாம் அலை: பிரதமர் மோடி 8 மணிக்கு அவசர ஆலோசனை!
கணினியுடன் வாக்கு எண்ணும் மையத்திற்குள் சென்ற 3 நிபுணர்கள் யார்? - முக.ஸ்டாலின் ட்விட்
விடைபெற்றார் விவேக்... காவல்துறை மரியாதையுடன் உடல் தகனம்
காவல்துறை மரியாதையுடன் தொடங்கியது நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலம்!
விவேக் இறப்புக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பில்லை - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி
"விவேக்... உண்மையான ஹீரோ!" - ரஜினி முதல் சூரி வரை... திரைக் கலைஞர்களின் புகழஞ்சலி