பருவநிலை உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி, சீனா, ரஷ்யா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா உள்பட 40 நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார்.
அமெரிக்காவில் வரும் ஏப்ரல் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் பருவநிலை மாற்றம் குறித்த உச்சி மாநாடு காணொலி மூலம் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் புதைபடிம எரிபொருள்கள் பயன்பாடு, காலநிலை மாற்றத்தால் அதிகரிக்கும் வெப்பநிலையைக் குறைக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள், காலநிலை மாற்ற தடுப்பு நடவடிக்கையின் மூலம் உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
இந்த மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியப் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின், இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா உள்பட 40 நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார். இந்த நிலையில் அமெரிக்க அதிபரின் அழைப்பை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டதாக, மத்திய வெளியுறவத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாகி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அமெரிக்க அதிபரின் சிறப்பு தூதர் ஜான் கெர்ரி, வரும் ஏப்ரல் 5-ம் தேதி டெல்லிக்கு வருகை வந்து மத்திய அமைச்சர்களுடன் உச்சிமாநாடு தொடர்பாக கலந்துரையாடுவார் எனவும் அரிந்தம் பாகி தெரிவித்துள்ளார்,.
இந்த ஆண்டு நவம்பரில் கிளாஸ்கோவில் நடைபெற உள்ள ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டிற்கான முக்கிய மைல்கல்லாக, இந்த உச்சி மாநாடு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டின் விவாதங்களை நேரலையாக ஒளிபரப்ப உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Loading More post
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி முன்பதிவு எப்போது? - மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு
அரசு ராஜிவ்காந்தி மருத்துவமனையில் குவியும் நோயாளிகள் - நிரம்பும் ஆக்சிஜன் படுக்கைகள்
’cowin’... 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவுசெய்யும் முறை
வெற்று பேச்சுகள் தேவையல்ல, நாட்டிற்கு தீர்வைக் கொடுங்கள்: ராகுல் காந்தி
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
கொரோனா காலம்.. உணவு முறையும், நோய் எதிர்ப்பு சக்தியும்- அரசு சித்த மருத்துவர் வழிகாட்டுதல்
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ