தேசிய விருதுகளைக் குவித்துள்ள தனுஷின் ‘அசுரன்’ படம் ஜப்பானில் நடந்த ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டுள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 2019 ஆண்டு வெளியான ’அசுரன்’ வசூல் சாதனை செய்ததோடு, தனுஷின் சிறந்த நடிப்பிற்காக பாராட்டுகளையும் குவித்தது. தனுஷ், மஞ்சுவாரியர், கென் கருணாஸ், டீஜே அருணாச்சலம், பசுபதி உள்ளிடோர் நடிப்பில் போட்டிப் போட்டுக்கொண்டு நடித்தார்கள். எழுத்தாளர் பூமணியின் ’வெக்கை’ நாவல் கதையை திரையில் காட்சிகளாக ரசிக்க வைத்தார் வெற்றி மாறன்.
தனுஷ் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் தனுஷின் நடிப்பை பார்த்துவிட்டு ‘நடிப்பு அசுரன்’ என்றே புகழத் தொடங்கினார்கள்.’சிவசாமி’ என்ற கேரக்டரில் தனுஷ் வாழ்ந்தார் என்றே பலரும் பாராட்டினர்.
மிக முக்கியமாக சிறந்த தமிழ் மொழி படமாக தேசிய விருதுக்கு "அசுரன்" தேர்வானது. மேலும் நடிகர் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது.தெலுங்கிலும் நடிகர் வெங்கடேஷ் நடிப்பில் ’நாரப்பா’ என்ற பெயரில் ரீமேக் ஆகி வருகிறது.
இந்நிலையில், ஜப்பான் நாட்டில் ஒசாகா நகரில் நேற்றும்,நேற்று முன்தினமும் நடந்த ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் அசுரன் திரையிடப்பட்டது. இதனால், தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
இவ்விழாவில் சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த படம், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த கலை இயக்குநர் உள்ளிட்டப் பிரிவுகளில் அசுரன் படம் விருதுகளை அள்ளியுள்ளது.
கைதி, சில்லுக் கருப்பட்டி உள்ளிட்டப் படங்களுக்கும் விருது கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
தமிழகத்தில் 8,000ஐ நெருங்கியது ஒருநாள் கொரோனா பதிப்பு!
டெல்லி கேபிடல்ஸ் வீரர் நார்ட்ஜேவுக்கு கொரோனா தொற்று!
ஹரித்வார் கும்பமேளா விழாவில் 48 மணி நேரத்தில் 1000 பேருக்கு கொரோனா!
‘1258 நாட்களாக தக்க வைத்திருந்த முதலிடம்’ - விராட் கோலியை பின்னுக்கு தள்ளினார் பாபர் அசாம்
சித்திரை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டாக எப்போதிலிருந்து கொண்டாடப்படுகிறது?
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!