[X] Close >

”மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்பியதில் மிக்க மகிழ்ச்சி” - சூர்யா

actor-Suriya-back-on-the-sets-for--Suriya-40-

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூர்யா 40’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.


Advertisement

‘சூரரைப் போற்று’ பட வெற்றிக்குப் பிறகு நடிகர் சூர்யா இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடிக்கவிருக்கிறார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ், ராஜ்கிரண் உட்பட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில், கொரோனா தொற்றால் நடிகர் சூர்யா பாதிக்கப்பட்டார். இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் குணமடைந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். தற்போது மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்ட சூர்யா ”மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்பியதில் மிக்க மகிழ்ச்சி” என்று குறிப்பிட்டு கையில் துப்பாக்கியுடன் அவரின் நிழல் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்திருக்கிறார்.


Advertisement

image

சூர்யா 40 திரைப்படத்தின் பூஜை இன்று நடந்தது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. கொரோனா காரணமாக சூர்யா தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதால், அவர் இல்லாத காட்சிகளை முதலில் படக்குழு படமாக்குகின்றனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close