இங்கிலாந்து அணியுடனான இரண்டாவது ட்வெண்டி ட்வெண்டி கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது.
அஹமதாபாத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய அணியில் இஷான் கிஷண், SURYA குமார் யாதவ் ஆகியோர் அறிமுக வீரர்களாக களமிறங்கினர். முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் ஜேசன் ராய் 46 ரன்கள் எடுத்தார். ஷர்துல் தாகுர், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
165 ரன்கள் என்ற இலக்கை, தொடக்க வீரர் இஷான் கிஷன், கேப்டன் விராட் கோலி ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 18 ஆவது ஓவரிலயே எட்டியது. அதிரடி விளாசல் காட்டிய இஷான் கிஷன் 32 பந்துகளில் 4 சிக்சர்கள் மற்றும் 5 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் எடுத்தார். ரிஷப் பந்த் தம் பங்கிற்கு 13 பந்துகளில் 26 ரன்கள் விளாசினார்.
49 பந்துகளில் 73 ரன்கள் குவித்த கேப்டன் விராட் கடைசி வரை ஆட்டமிழக்காமல், வெற்றிக் களிப்புடன் பெலிவியன் திரும்பினார். 5 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்று சமநிலையில் உள்ளதால் தொடர் விறுவிறுப்படைந்துள்ளது.
Loading More post
குடல் இறக்க அறுவை சிகிச்சை முடிந்து முதல்வர் பழனிசாமி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்!
முக்கியச் செய்திகள்: அச்சுறுத்தும் கொரோனா 2-ம் அலை முதல் சென்னை அணியின் வெற்றி வரை
தடுப்பூசி குறித்த சர்ச்சை கருத்து - மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு
6 லட்சம் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் இன்று சென்னை வருகை!
ஜடேஜா -மொயின் அலி அசத்தல் பந்துவீச்சு! ராஜஸ்தானை 45 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சென்னை!
மேக்ஸ்வெல் வரவு - தொடர் வெற்றி : பெங்களூர் அணியின் ‘ஈ சாலா கப் நம்தே’ கனவு பலிக்குமா?
கொரோனா 2-ம் அலையின் மோசமான பாதிப்பை இந்தியா தடுக்கத் தவறியது எப்படி? - ஒரு பார்வை
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா? - ஒரு பார்வை
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்