தமிழக பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், போட்டியிட விரும்பும் இடங்கள் தொடர்பாக அதிமுகவுடன் அக்கட்சி ஆலோசனையில் ஈடுபட்டது.
எந்தெந்த தொகுதிகளை அதிமுகவிடம் இருந்து கேட்டுப் பெறலாம் என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, தனியார் நட்சத்திர ஹோட்டலில், பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் அதிமுக மூத்த நிர்வாகிகளான கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் உள்ளிட்டோரை சந்தித்துப் பேசினர். சுமார் இரண்டு மணி நேரம் நீடித்த இந்த பேச்சுவார்த்தையில், சென்னை, கோவை ஆகிய மாவட்டங்களில் குறிப்பிட்ட தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
அவை எந்த எந்த தொகுதிகள் என்பதை அதிமுகவிடம் கேட்டு பெற எல்.முருகன், சிடி.ரவி, பொன்.ராதாகிருஷ்ணன், அண்ணாமலை ஆகியோர் தி.நகர் பாஜக அலுவலகத்தில் இரவு 8 மணியில் இருந்து 9 மணி வரை ஆலோசனை நடத்தினர்.
அதைத் தொடர்ந்து சென்னை லீலா பேலஸில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன், பொன். ராதாகிருஷ்ணன், சி,டி.ரவி, அண்ணாமலை ஆகியோர் அதிமுக சார்பில் கேபி.முனுசாமி, வைத்தியலிங்கம், எம்.ஆர்.விஜயபாஸ்கர், தங்கமணி, வேலுமணி ஆகியோர் பாஜக குழுவுடன் ஆலோசனை நடத்தினர். இதில் சில தொகுதிகளை, அதிமுகவின் கூட்டணி கட்சிகள் அனைவரும் கேட்பதால் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதே போல் சென்னை, கோவையில் பாஜக சில தொகுதிகளை கேட்பதால், பேச்சுவார்த்தை மூலம் யாருக்கு எந்த எந்த தொகுதிகள் வழங்கலாம் என்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்ததாக தெரிகிறது.
Loading More post
ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: காய்கறிக் கடைகள், தியேட்டர்கள் இயங்கத் தடை
தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு!
“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு அமல்” - தமிழக அரசு
மேக்ஸ்வெல்-டிவில்லியர்ஸ் அதிரடி! கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு!
3-வது கொரோனா அலைக்கு மகாராஷ்டிரா தயாராகிறது: அமைச்சர் ஆதித்யா தாக்கரே
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி