[X] Close >

தொப்பியை கழற்றி மரியாதையுடன் நடந்துகொண்ட அஜித் - வைரல் வீடியோ

Ajith-latest-rifle-training-photos-go-viral

வெள்ளை நிற டிசர்ட், கருப்புக் கலர் மாஸ்க்குடன் அஜித் துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் ஈடுபடும்  வீடியோக்கள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன. 


Advertisement

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் அஜித். நடிப்பு மட்டுமல்லாது பைக் ரேஸ், ஏரோ மாடலிங், போட்டோகிராபி, சமையல் உள்ளிட்டவற்றிலும் கவனம் செலுத்தி வரும் அவர், கடந்த சில வருடங்களாக துப்பாக்கிச் சுடுதலிலும் கவனம் செலுத்தி வருகிறார். அதற்காக சென்னை எக்மோரில் உள்ள ரைபிள் கிளப்பில் உறுப்பினராக சேர்ந்து துப்பாக்கிச்சுடுதல் பயிற்சி எடுத்து வரும் அஜித், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட கோவை மற்றும் டெல்லியில் நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளில் பங்கேற்றார்.

துப்பாக்கி சுடுதலின் அடுத்தக்கட்டப் போட்டிகளில் பங்கேற்க பயிற்சி எடுத்து வரும் அஜித், அதற்காக நவீன ரக துப்பாக்கிகளில் பயிற்சி எடுத்து வருவதாக கூறப்பட்டது. அண்மையில் அது தொடர்பான புகைப்படம் ஒன்றும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் தற்போது சென்னை ரைபிள் கிளப்பில் அஜித் துப்பாக்கிச் சுடுதல் பயிற்சி ஈடுபடும் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் உலா வருகின்றன.


Advertisement

அந்த வீடியோக்களில், வெள்ளை நிற டீசர்ட், கருப்புகலர் மாஸ்க்குடன், சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் வலம் வரும் அஜித், துப்பாக்கிச் சுடுதல் பயிற்சிக்கு தயாராகும் பணிகளில் ஈடுபடுகிறார். அதன் பின்னர் அவரை அழைத்து பேசும் ஒருவரிடம் உரையாடும்போது, அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் தனது தொப்பியை கழற்றி, தனது இரு கைகளையும் பின்னால் கைகட்டிக்கொண்டு பேசுகிறார். 


Advertisement

மற்றொரு வீடியோவில், “ தொலை நோக்கியின் முன்னர் தனது பொஷிஷன் சரியாக இருக்கிறதா என்பதை சரிபார்க்கும் அஜித், அதனைத்தொடர்ந்து தனது டார்க்கெட் குறித்து அங்கு வைக்கப்பட்டிருந்த தொலை நோக்கில் பார்க்கிறார். இந்த வீடியோக்களும், அது தொடர்பான புகைப்படங்களும் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close