மருத்துவரின் வீட்டில் இருந்த வெள்ளிநகைகள் நிறைந்த பெட்டியை திருட, ரூ. 90 லட்சம் மதிப்புள்ள ப்ளாட் வாங்கி அதில் சுரங்கப்பாதையை தோண்டியிருக்கின்றனர் ஜெய்ப்பூரைச் ஸ்மார்ட் திருடர்கள்.
ஹாலிவுட் சினிமாவில்தான் இதுபோன்ற காட்சிகளை பார்த்திருக்கிறோம். ஆனால் ராஜஸ்தான் தலைநகரான ஜெய்ப்பூரில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ஜெய்ப்பூரின் வைசாலி நகரில் அமைந்துள்ளது டாக்டர் சுனித் சோனியின் பங்களா. இவர் புதன்கிழமை(பிப்ரவரி 24) காவல்நிலையத்தில் ஒரு புகாரைக் கொடுத்திருந்தார். அதில், திருடர்கள் தனது வீட்டிற்கு அருகிலுள்ள ப்ளாட்டிலிருந்து சுரங்கப்பாதை அமைத்து தனது வீட்டில் வைத்திருந்த 400 கிலோ வெள்ளிக்கட்டிகளை பெட்டியிலிருந்து திருடியிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து போலீஸார் விசாரித்தபோது, சுனித் வீட்டிற்கு அருகில் ரூ.90 லட்சம் மதிப்பில் யாரோ ப்ளாட் வாங்கி, அதில் கிட்டத்தட்ட 3 மாதங்களாக கஷ்டப்பட்டு சுரங்கப்பாதை தோண்டியது தெரியவந்திருக்கிறது. அதுவும் சுனித் தனது வீட்டில் வெள்ளிக்கட்டிகளை 3 பெரிய பெட்டிகளில் போட்டு தரைத்தளத்திலிருந்து 6 அடி ஆழத்தில் மறைத்து வைத்திருந்திருக்கிறார். சுரங்கப்பாதை அந்த அறைவரை நேராகச் சென்றிருந்ததால், அவர் வீட்டில் வெள்ளிக்கட்டிகள் அதிக அளவில் இருப்பது தெரிந்தவர்களில் யாரோதான் இந்த வேலையை செய்திருக்கமுடியும் என்று கூறும் போலீஸாருக்கு திருடர்கள் சந்தேகப்படுவதற்குக்கூட ஒரு துப்யையும் விட்டுவைக்கவில்லை. மேலும், ப்ளாட் உரிமையாளர் அந்த இடத்தில் வீடுகட்ட ஆரம்பித்திருக்கிறார். எனவே இது போலீஸாரை திசைதிருப்புவதற்காகக்கூட இருக்கலாம். எனவே இந்த வழக்கில் திடீர் திருப்பத்தை எதிர்பார்க்கலாம் என்கின்றனர் போலீஸார்.
கடந்த மாதம் மகாராஷ்டிராவில் நகைக்கடைக்கு அருகிலேயே ரூ.28 ஆயிரம் கொடுத்து வாடகைக்கு பழக்கடை வைத்து, அதிகாலையில் சுவரில் துளையிட்டு நகைகளைத் திருடிச்சென்றுள்ளனர் ஸ்மார்ட் திருடர்கள்!
Loading More post
தமிழகத்தில் 8,000ஐ நெருங்கியது ஒருநாள் கொரோனா பதிப்பு!
டெல்லி கேபிடல்ஸ் வீரர் நார்ட்ஜேவுக்கு கொரோனா தொற்று!
ஹரித்வார் கும்பமேளா விழாவில் 48 மணி நேரத்தில் 1000 பேருக்கு கொரோனா!
‘1258 நாட்களாக தக்க வைத்திருந்த முதலிடம்’ - விராட் கோலியை பின்னுக்கு தள்ளினார் பாபர் அசாம்
சித்திரை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டாக எப்போதிலிருந்து கொண்டாடப்படுகிறது?
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!