அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பெய்த பனி செயற்கையானது என அமெரிக்க மக்கள் பகீர் கிளப்பியுள்ளனர்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வரலாறு காணாத பனி பெய்தது. கடுமையான பனி காரணமாக மக்கள் மின்சாரம் மற்றும் தண்ணீர் இல்லாமல் தவித்து வருகின்றனர். இது வரலாறு காணாத பனி என்றும், 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தண்ணீர் மின்சாரம் இல்லாமல் தவித்து வருவதாகவும் செய்திகள் வெளியிட்டன. இந்த பனிப்பொழிவால் 20-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். கட்டி கட்டியாக கொட்டும் பனியால் செய்வதறியாது மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.
இந்நிலையில் தற்போது பனிப்பொழிவு குறைந்து வருவதால் பொதுமக்கள் மெல்ல மெல்ல இயல்புநிலைக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில் தற்போது புதிய பிரச்னை ஒன்று இணையத்தில் தலைதூக்கியுள்ளது. சதிக் கோட்பாடு என்ற தலைப்பில் இணையத்தில் பரபரப்பாக பேசப்படும் ஒரு நிகழ்வு பனிப்பொழிவை மையமாக கொண்டுள்ளது.
சதிக் கோட்பாடு (Conspiracy Theory) என்பது சாதாரண நிகழ்வுகளை ஒரு சக்திவாய்ந்த ரகசிய கும்பல் திட்டமிட்டு நிகழ்த்துவதாக நம்பப்படுவது ஆகும். அப்படி ஒரு குற்றச்சாட்டு இணையத்தில் பரவலாக பேசப்படுகிறது. அது, இந்த பனிக்கட்டி இயற்கையானது அல்ல என்றும், செயற்கையாக உருவாக்கப்பட்டு ஒரு மாகாணமே அழிவுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் பலரும் குற்றம் சாட்டுகின்றனர். அதற்கு எடுத்துக்காட்டாக அவர்கள் ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளனர்.
I am obsessed with idiots in Texas thinking the snow is fake and a government plot pic.twitter.com/7F0hsLB3hB
ஒரு பனிக்கட்டியை நீண்ட நேரமாக நெருப்பில் காட்டுகின்றனர். ஆனால் அந்த பனிக்கட்டி உருகவே இல்லை. இந்த வீடியோவை பகிர்ந்து பதிவிட்டுள்ள பலரும் ஒரு பனிக்கட்டி நெருப்பைக் கண்டதும் உருக வேண்டும், குறைந்தபட்சம் தண்ணீராவது சொட்ட வேண்டும். இங்கு எதுவுமே நடக்கவில்லை. ஏதோ தவறாக இருக்கிறது. ஏதோ சதி நடக்கிறது என தெரிவித்துள்ளனர்.
I weep for the education system in the state of Texas. pic.twitter.com/lq45woWGrx — chris evans (@notcapnamerica) February 21, 2021
சிலர் இதற்கு விளக்கமும் அளித்துள்ளனர். பனி உருகும்போது, மீதமுள்ள பனியானது தண்ணீரை உறிஞ்சிவிடும். அதனால்தான் அது சொட்டு சொட்டாகத் தெரியவில்லை. அதுபோக, பனிக்கட்டி உருகி வாயுவாகவும் செல்லும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இணையத்தில் கிளம்பும் இந்த குற்றச்சாட்டுக்கு கலவையான விமர்சனங்களும், விளக்கங்களும் எழுந்து வருகின்றன.
Loading More post
“மதுரை சித்திரை திருவிழா ஆலய வளாகத்திற்குள் வாகனக் காட்சியாக நடைபெறும்”-நிர்வாகம்
இருசக்கர வாகனம் தயாரிக்கும்போதே வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் - நீதிமன்றம்
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் 41 கைதிகளுக்கு கொரோனா!
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
கொரோனா காலம்.. உணவு முறையும், நோய் எதிர்ப்பு சக்தியும்- அரசு சித்த மருத்துவர் வழிகாட்டுதல்
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ