மோகன் லால் நடிப்பில் இன்று அமெசான் பிரைமில் வெளியாகியுள்ள மலையாள திரைப்படமான 'திருஷ்யம் 2' ரசிகர்களிடையே பெரும் பாராட்டை பெற்றுள்ளது. இந்நிலையில், 'பாபநாசம் 2' படத்தில் கமல் நடிப்பாரா என்று பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால்-மீனா ஜோடியாக நடித்து திரைக்கு வந்த ‘திரிஷ்யம்’ படம் வசூல் சாதனை நிகழ்த்தியது. இந்த படம் தமிழில் கமல்ஹாசன்-கவுதமி நடிக்க பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் ஆனது. இரண்டு பெண் குழந்தைகளின் தந்தையாக கமல்ஹாசன் நடித்து இருந்தார். பாபநாசம் படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில் மோகன்லால் நடிப்பில் திரிஷ்யம் 2 படம் வெளியாகி உள்ளது. இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் தமிழிலும் பாபநாசம் 2 வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வந்தது. மேலும் அதில் கமல் நடிப்பாரா என்ற கேள்வியும் எழுந்தது. இதனையடுத்து படத்தயாரிப்பு நிறுவனம் கமல்ஹாசனை அனுகியதாகவும், அவர் "பாபநாசம் 2" இல் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இப்போது தேர்தல் இருப்பதாலும் அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் "விக்ரம்" படத்தில் நடிக்க இருப்பதால் இவை முடிந்தவுடன் "பாபநாசம் 2" படப்பிடிப்பை தொடங்க கமல்ஹாசன் நிபந்தனை விதித்துள்ளார். இதனை ஒத்துக்கொண்ட தயாரிப்பு நிறுவனம் இடைப்பட்ட காலத்தில் தெலுங்கில் வெங்கடேஷ் நடிப்பில் "திருஷ்யம் 2" ரீமேக்கை முடிக்க முடிவு செய்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Loading More post
அரை சதம் விளாசிய ரோகித் - கடைசி ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்த கோலி!
”தமிழர்களின் துடிப்பான பண்பாடு உலக அளவில் புகழ் பெற்றது” – பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!
பாலியல் புகார் எதிரொலி : கட்டாய காத்திருப்பு பட்டியலில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மார்ச் 1 முதல் தடுப்பூசி!
ஆறு விக்கெட்டுகளை அள்ளிய அக்ஸர் பட்டேல் - இங்கிலாந்து 112 ரன்னில் ஆல் அவுட்!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!