திஷா ரவி வழக்கில் ஊடகங்களுக்கு தகவல்களை கசியவிடக்கூடாது என்று டெல்லி காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
'டூல்கிட்' வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவி, விசாரணை விவரங்களை யாருக்கும் கசியவிடக்கூடாது என்று டெல்லி காவல்துறைக்கு உத்தரவிடக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். தனது தனிப்பட்ட உரையாடல் குறித்த தகவல்களை வெளியிட்ட ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது டெல்லி காவல்துறை சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் திஷா ரவி சம்பந்தப்பட்ட விசாரணை விவரங்கள் எதையும் காவல்துறை கசியவிடவில்லை என்றும், மனுதாரர் தவறான தகவலை கூறியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து எதிர்மனுதாரர்கள் விரிவான பதில் மனு தாக்கல் செய்யும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன், டெல்லி காவல்துறை விசாரணை விவரங்களை கசியவிடக்கூடாது என்றும், பிரமாண பத்திரத்தில் கூறியதை சரியாக பின்பற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தது.
இதனிடையே, 5 நாட்கள் காவல் முடிந்து திஷா ரவி இன்று டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது, மேற்கொண்டு மூன்று நாட்களுக்கு நீதிமன்ற காவலில் திஷா ரவியை வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
Loading More post
மநீம - சமக - ஐஜேகே கூட்டணி? கமலுடன் சரத்குமார் சந்திப்பு!
சட்டப்பேரவை தேர்தல்: அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 22 தொகுதிகள்?
''குளிர்காலம் முடிவில் பெட்ரோல், டீசல் விலை குறையும்'': பெட்ரோலியத்துறை அமைச்சர் விளக்கம்
நைஜீரியாவில் 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளை கடத்திய பயங்கரவாதிகள்!
அரசு போக்குவரத்து ஊழியர்கள் 3ஆவது நாளாக வேலை நிறுத்தம்: பேச்சுவார்த்தைக்கு அழைப்பு!
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'