[X] Close >

“விவசாயிகளுக்கு ஆதரவாக ட்வீட் செய்யுங்கள்” - சச்சினுக்கு கடிதம் எழுதிய ஆம் ஆத்மி நிர்வாகி

AAP-Party-National-Executive-Member-Preeti-Sharma-Menon-writes-a-open-letter-to-Sachin-Tendulkar-to-tweet-and-support-the-farmers-protest

விவசாயிகள் போராட்டம் தொடர்பாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சினின் ட்வீட் சர்ச்சையை கிளப்பிய நிலையில் “விவசாயிகளுக்கு ஆதரவாக ட்வீட் செய்யுங்கள்” என சச்சினுக்கு கடிதம் எழுதியுள்ளார் ஆம் ஆத்மியின் தேசிய செயற்குழு உறுப்பினர் பிரீத்தி ஷர்மா மேனன்.


Advertisement

இந்தியாவில் கிரிக்கெட் மதம் என்றால், ரசிகர்கள் உங்களைதான் கடவுளாக வழிபடுகிறார்கள் எனவும் இந்தக் கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார். 

“நீங்கள் இந்தியாவின் பெருமை. இந்த தேசத்தின் மக்கள் உங்களது வெற்றியை தங்களது வெற்றியாக கொண்டாடியுள்ளனர். இந்தியாவில் கிரிக்கெட் மதம் என்றால், ரசிகர்கள் உங்களைதான் கடவுளாக வழிபடுகிறார்கள். பாரத ரத்னா விருதை வென்ற நீங்கள் இந்த நாட்டுக்கே சோறு போடும் விவசாயிகளுக்காக பேட் செய்ய வேண்டிய நேரம் இது. 


Advertisement

விவசாயிகளுக்காக நீங்கள் ட்வீட் செய்ய வேண்டுமென விவசாயியின் மகன் ஒருவர் உங்கள் வீட்டுக்கே வந்து வலியுறுத்தி வருகிறார். நீங்கள் அதை ஏற்று ஒரே ஒரு ட்வீட் செய்தால் இந்த தேசமே உங்களை கொண்டாடும்” என அந்தக் கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close