சிம்பு பிறந்தநாளையொட்டி நாளை ‘மாநாடு’ படத்தின் மலையாள டீசரை நடிகர் நடிகர் பிரித்திவிராஜும் இந்தி டீசரை பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப்பும் வெளியிட இருக்கிறார்கள்.
ஈஸ்வரன் படத்தை முடித்தக் கையோடு கடந்த நவம்பர் 9 ஆம் தேதி முதல் நடிகர் சிலம்பரசன் வெங்கட் பிரபுவின் ’மாநாடு’ படத்தில் நடித்து வருகிறார். இயக்குநரும் தயாரிப்பாளருமான சுரேஷ் காமட்சி தயாரிக்கும் இப்படத்தில் ‘அப்துல் காலிக்’ என்ற இஸ்லாமியராக சிம்பு நடிக்கிறார். யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
சமீபத்தில் இதன் ஃபர்ஸ்ட் லுக், செகெண்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருந்த நிலையில், சிம்புவின் பிறந்தநாளையொட்டி ’மாநாடு’ டீசர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனையொட்டி, இதன், மலையாள டீசரை நடிகர் பிரித்திவிராஜும், இந்தி டீசரை பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப்பும், கன்னட டீசரை கிச்சா சுதீப்பும், தெலுங்கு டீசரை ரவி தேஜாவும் நாளை 2.34 மணிக்கு வெளியிடுகிறார்கள்.
Loading More post
பிருத்வி ஷா - தவான் அதிரடி! சென்னையை வீழத்தியது டெல்லி கேபிடல்ஸ்!
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஜைக்கா நிதி நிறுவனத்துடன் ஒப்பந்தம் - ஆர்.டி.ஐ மூலம் தகவல்
தியேட்டரில் கூடுதலாக ஒரு காட்சி - தமிழகத்தில் புதிய கொரோனா தடுப்பு விதிமுறைகள்
அதிமுக கடலூர் எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் உட்பட 6 பேர் கட்சியில் இருந்து நீக்கம்
தமிழகத்தில் 6 ஆயிரத்தை நெருங்கியது தினசரி கொரோனா பாதிப்பு