இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி ஐபிஎல் போட்டிகளின் மூலம் அதிகம் சம்பாதித்த வீரர் என்ற சாதனையை படைக்க உள்ளார். கிட்டத்தை 150 கோடிகளுக்கு மேல் தோனி ஐபிஎல் போட்டிகளில் சென்னை மற்றும் புனே அணிகளுக்காக விளையாடியதன் மூலம் சம்பாதித்துள்ளார். அவரை 2021 ஐபிஎல் சீசனுக்கும் சென்னை அணி ரீடெயின் செய்துள்ளது. இதன் மூலம் இந்த ரெக்கார்டை படைத்துள்ளார் தோனி.
கடந்த 2020 ஐபிஎல் சீசன் வரை தோனி ஐபிஎல் மூலமாக 137 கோடிகளை ஈட்டியிருந்தார். அவருக்கு அடுத்தபடியாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா 146.6 கோடிகளை ஐபிஎல் மூலம் ஈட்டியுள்ளார். 204 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள தோனி 4632 ரன்களை குவித்துள்ளார். அதே போல ஐபிஎல் போட்டிகளில் மட்டும் 216 சிக்ஸர்களையும் அவர் அடித்துள்ளார்.
Loading More post
கொரோனா 2-ம் அலையின் மோசமான பாதிப்பை இந்தியா தடுக்கத் தவறியது எப்படி? - ஒரு பார்வை
மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி - மத்திய அரசு
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி!
தமிழகத்தில் ஒரேநாளில் 10,941 பேருக்கு கொரோனா பாதிப்பு - 44 பேர் உயிரிழப்பு
வேலூர்: அரசு மருத்துவமனையில் 5 நோயாளிகள் உயிரிழப்பு- ஆக்சிஜன் பற்றாக்குறை காரணம் என புகார்