வேதாரண்யம் அருகே ஆயக்காரன்புலத்தில் பூட்டிய வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 4 சவரன் நகைகள் மற்றும் ரூ.23 ஆயிரத்தை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே ஆயக்காரன்புலம் நைனான்குத்தகையைச் சேர்ந்தவர் மூதாட்டி ராஜகுமாரி. இவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த ராஜகுமாரி பக்கத்து வீட்டில் படுத்து தூங்கி விட்டு அடுத்த நாள் வீட்டுற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பு புற கதவில் உள்ள பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த திருமாங்கல்யம், பிராங்காசு, மூக்குத்தி, மோதிரம் உள்பட 4 சவரன் நகைகள், ரூ. 23 ஆயிரம் ரொக்கம் கொள்ளை போனது தெரியவந்தது.
இதையடுத்து வாய்மேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் இந்த கொள்ளை சம்பவம் குறித்து வாய்மேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளை குறித்து துப்புதுலக்க நாகையிலிருந்து மோப்ப நாய் மற்றும் தடய அறிவியல் நிபுணர்களும் காவல் துறையினரும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Loading More post
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
மார்ச் 2 முதல் வேட்பாளர் நேர்காணல் - திமுக தலைமை அறிவிப்பு
மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா!
''கூட்டணி பற்றி கமலிடம் பேசினோம்; நல்ல முடிவு வரும்'' - சரத்குமார் பேட்டி
புதுக்கோட்டை: தனியார் பேருந்துகள் 3 மடங்கு கட்டணம் வசூலிப்பதாக புகார்... அதிகாரிகள் ஆய்வு!
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'