புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்த சரக்கு வாகனத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
சென்னை தாம்பரம் அடுத்த மதுரவாயல் புறவழிச்சாலை அனகாபுத்தூர் அருகே திருப்போரூரில் இருந்து கோயம்பேடு நோக்கி கொரியர் பார்சல்களை ஏற்றிக் கொண்டு சென்ற சரக்கு வாகனத்தில் திடீரென புகை வரத் துவங்கியுள்ளது.
இதை கவனித்த வாகன ஓட்டுநர் சண்முகம் உடனே வாகனத்தை புறவழிச்சாலையின் ஓரத்தில் நிறுத்திவிட்டு இறங்கி வந்துவிட்டார். சிறிது நேரத்தில் புகை தீயாக மாறி மளமளவென எரியத் துவங்கியது. இதில் பார்சல் கொண்டு சென்ற பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாயின.
தகவல் அறிந்து தாம்பரம், மதுரவாயல், பூந்தமல்லி உள்ளிட்ட இடங்களில் இருந்து மூன்று தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின. விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading More post
நிரவ் மோடியை இந்தியா அழைத்துவர இங்கிலாந்து உள்துறை அமைச்சர் அனுமதி
தீபக் சாஹர் அசத்தல் பவுலிங்! சென்னையின் வெற்றிக்கு 107 ரன்கள் இலக்கு
தமிழகத்தில் கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிக்க முடிவு?
"கொரோனாவை தடுக்க மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்"- தமிழிசை சவுந்தரராஜன்
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 8000ஐ தாண்டியது; ஒரே நாளில் 33 பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்?
டாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்!
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்