வரும் 2022-23 வாக்கில் நம் பக்கத்து நாடான பாகிஸ்தானில் 5ஜி தொலைத்தொடர்பு சேவை அறிமுகமாக உள்ளது. இதை இஸ்லாமாபாத்தை சேர்ந்த ஊடக நிறுவனங்கள் உறுதி செய்துள்ளன.
இதன் மூலம் இணையத்தின் தரவிறக்க வேகம் ஒரு நொடிக்கு ஒரு ஜிகா பிட் என அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான பணிகள் இப்போது பாகிஸ்தானில் வேகம் எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன. இதன் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் அந்த நாடு அரசு திட்டமிட்டுள்ளதாம்.
2023 நிதியாண்டில் 5ஜி அலைக்கற்றைக்கான ஏலத்தை விட உள்ளதாக பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையம் கடந்த டிசம்பரில் தெரிவித்திருந்தது.
கொரோனா நெருக்கடி நேரத்தில் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த டிஜிட்டல் தொழில்நுட்பம் கைகொடுத்ததை அரசாங்கம் உணர்ந்ததால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. வணிக ரீதியாக வரும் 2022 - 23 இல் 5ஜி சேவை பாகிஸ்தானில் அறிமுகமாகும் என எக்ஸ்பிரஸ் ட்ரைபியூன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
2019 மற்றும் 2020இல் வணிக நோக்கமில்லாது சோதனை ஓட்டமாக சில இடங்களில் 5ஜி சேவை சோதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானின் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் அமினுல் ஹக் வரும் 2022 டிசம்பர் வாக்கில் 5ஜி சேவை அறிமுகமாகும் என நம்புவதாக தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் துறை சார்ந்த வல்லுநர்கள் பாகிஸ்தானில் 5ஜி சேவை அறிமுகமாக 5 முதல் 7 ஆண்டுகள் வரை ஆகலாம் என தெரிவித்துள்ளனர்.
Loading More post
காட்டு யானையுடன் செல்ஃபி: யானை தாக்கி இளைஞர் உயிரிழப்பு!
அரசியல் கட்சிகளோடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று ஆலோசனை
கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் பிரதமர் மோடி!
மீண்டும் ரூ.25 உயர்வு.. ராக்கெட் வேகத்தில் உயரும் LPG விலை: மக்கள் அதிர்ச்சி!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு: நள்ளிரவில் அமித்ஷாவுடன் 3 மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தை
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி