[X] Close >

கீதா கோபிநாத் குறித்த நடிகர் அமிதாப் பச்சன் கருத்து... ட்விட்டரில் எதிர்ப்பும், ஆதரவும்!

Support-and-opposition-on-Twitter-following-actor-Amitabh-Bachchan-s-comment-on-economist-Gita-Gopinath

இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் அமிதாப் பச்சன். அவர் 'கோன் பனேகா குரோர்பதி' நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது உலகறிந்த செய்தி. இந்நிலையில் அந்த நிகழ்ச்சியில் அண்மையில் கலந்து கொண்ட போட்டியாளர் ஒருவரிடம், அனைத்துலக நாணய நிதியத்தின் (IMF) பொருளாதார நிபுணரும், ஹார்வர்டு பல்கலைக்கழக பொருளாதார துறை பேராசிரியையுமான கீதா கோபிநாத் குறித்து ஒரு கேள்வி கேட்டுள்ளார். 


Advertisement

அப்போது போட்டியாளரிடம் ‘இவ்வளவு அழகான முகம் கொண்ட இவரை யாருமே பொருளாதாரத்துடன் ஒப்பிடவே முடியவில்லை’ என கமெண்ட் சொல்லியிருந்தார் அமிதாப். அவருடைய கருத்து  இப்போது ட்விட்டர் தளத்தில் வைரலாகி உள்ளது. சிலர் அமிதாப்புக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்து சொல்லி வருகின்றனர். 

“ஓகே. ஆனால் ஒருபோதும் இது போன்ற கமெண்ட் வரும் என நினைத்துகூட பார்த்தது இல்லை. அமிதாப்பின் மிகப்பெரிய ரசிகையான எனக்கு இது ஸ்பெஷல்தான்” என அந்த வீடியோவை டேக் செய்து ட்வீட் போட்டுள்ளார் கீதா கோபிநாத்.

‘இருந்தாலும் அழகையும், அறிவையும் முடிச்சுபோடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அமிதாப் யோசிக்காமல் இதை சொல்லியுள்ளார்’ என ட்விட்டர் பயனர் ஒருவர் தெரிவித்துள்ளார். மற்றொரு பயனர் அனைத்திற்கும் எதிர்ப்பு சொல்வது வருத்தம் தெரிவித்துள்ளார். 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close