[X] Close >

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார் ஸ்டீவ் ஸ்மித்!

Rajasthan-Royals-release-Steve-Smith-from-IPL-2021

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து அவ்வணியின் கேப்டன் ஸ்டீஸ் ஸ்மித் விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.


Advertisement

2021-ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஏப்ரல் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஐபிஎல் அணிகளுக்கு வீரர்களை தேர்ந்தெடுப்பதற்கான மினி ஏலத்தை பிப்ரவரி 11-ஆம் தேதி நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக ஐபிஎல் தொடரில் இருக்கும் 8 அணிகளும் சில வீரர்களை வெளியேற்றி புதிய வீரர்களை வாங்கும் சூழல் உருவாகியுள்ளது.

image


Advertisement

இதில் ஐபிஎல் வரலாற்றில் கடந்தாண்டு மோசமாக விளையாடிய சில வீரர்கள் சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேற்றப்படலாம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான ஒப்பந்தம் முடிவடைந்ததால் ஸ்டீவ் ஸ்மித் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த சீசன்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் சுமாராக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close