விஜய்யின் மாஸ்டர் படம் வெற்றியடைய வேண்டும் என மாஸ்டர் படக்குழு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்துள்ளது
விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் திரைப்படம் ‘மாஸ்டர்’.இந்த திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். ரசிகர்கள் மத்தியில் அதிகளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தத் திரைப்படத்தின் டீஸரானது கடந்த ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி வெளியிடப்பட்டது. பட வெளியீடு நெருங்கியதையடுத்து மாஸ்டர் படக்குழு சமீபத்திய சில நாட்களாக படத்தின் ப்ரோமா காட்சிகளை வெளியிட்டு வருகிறது.
Om Namah Shivaya ?? pic.twitter.com/y8VKm4KWUo
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) January 10, 2021Advertisement
அண்மையில் வெளியான ப்ரோமாக்களில் விஜய் மற்றும் விஜய்சேதுபதி பேசிய வசனங்கள் கவனம் ஈர்த்தன. இந்நிலையில் தற்போது மாஸ்டர் படம் வெற்றியடைய வேண்டும் என வேண்டி மாஸ்டர் படக்குழு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு சென்றிருக்கிறது.இது தொடர்பான புகைப்படத்தை மாஸ்டர் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் அவர்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
Prayed at Arunachala, Thiruvannamalai for the success of #MasterFilm @Dir_Lokesh @iam_arjundas @Jagadishbliss @MrRathna @lalluTweets pic.twitter.com/uu9r2bGCj4
— Anirudh Ravichander (@anirudhofficial) January 10, 2021Advertisement
அந்தப் புகைப்படத்தில் இசையமைப்பாளர் அனிருத், இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், இயக்குநர் ரத்னா, விஜயின் மேலாளர் ஜெகதீஷ், நடிகர் அர்ஜூன் தாஸ் உள்ளிட்டோர் உள்ளனர். இந்தப் புகைப்படம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Loading More post
“மேற்கு வங்கத்தில் தேர்தல் பரப்புரைக்கு அனுமதி இல்லை!” - தேர்தல் ஆணையம்
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
தமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி - தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் 12000ஐ கடந்த தினசரி கொரோனா பாதிப்பு - 59 பேர் உயிரிழப்பு
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
காரை விற்று மக்களுக்கு உதவி... மும்பையின் 'ஆக்சிஜன் மேன்' ஷாஹனாவாஸ்!
’cowin’... 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவுசெய்யும் முறை