ஆன்லைன் சூதாட்டத்தில் 7 லட்சம் ரூபாய் பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. தொடர்ச்சியான ஆன்லைன் சூதாட்ட மரணங்கள், அதிலிருந்து தப்பிக்க, அதனை தடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து யோசிக்க வைத்துள்ளது.
தூத்துகுடி மாவட்டத்தைச் சேர்ந்த எல்வின் பிரட்ரிக் என்பவர் கோவை மாவட்டம் ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், இவர் இணையதள சூதாட்டத்தில் ஆர்வமாக விளையாடி வந்த நிலையில், தொடர்ந்து பணத்தை இழந்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்த பிறகும் விளையாட்டைத் தொடர்ந்து வந்த அவர் கடந்த 4ஆம் தேதி வரை 7 லட்சத்து 64 ஆயிரம் ரூபாயை இழந்துள்ளதாக தெரிய வருகிறது.
இதனால் மனமுடைந்த எல்வின் பிரட்ரிக், திருப்பூர் - வஞ்சிப்பாளையம் இடையே உள்ள தண்டவாளத்தில் ரயிலின் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தச் சம்பவம் கடந்த 2 நாட்களுக்கு முன் நடந்த நிலையில், அவரது அடையாளம் தெரியாமல் இருந்து வந்தது. ஏற்கனவே எல்வின் காணவில்லை என கோவை பீளமேடு காவல்நிலையத்தில் அளிக்கப்பட்டிருந்தது. இறந்தவருடன் புகைப்படம் ஒத்துபோனதால் இறந்தது எல்வின் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்பது குறித்து வழக்கறிஞர் கருத்து பின்வருமாறு:
Loading More post
அன்றே கணித்த சுனில் கவாஸ்கர்: 32 ஆண்டுகால ஆஸி.,யின் சரித்திரத்தை தகர்த்த இந்தியா
வாஷிங்டன் சுந்தர், பன்ட் விளாசல்! - டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி
அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா: பொறுப்பேற்கும் முன்பே பைடன் சந்திக்கும் முதல் சவால்!
“சசிகலாவை சேர்க்க முடியாது” -பிரதமரை சந்தித்தபின் முதல்வர் பழனிசாமி பேட்டி
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி
மருத்துவத் துறைக்கு தன்னலமற்ற சேவை வழங்கிய மருத்துவர் சாந்தா கடந்துவந்த பாதை
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?