இந்திய தேசிய கீதம் ஒலிக்கையில் தன்னை மீறி கண்ணீர் சிந்திய பந்துவீச்சாளர் முகமது சிராஜின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. போட்டி தொடங்குவதற்கு முன்பு இரு நாடுகளின் தேசிய கீதம் ஒலிக்கப்படுவது வழக்கமான ஒன்றுதான். இன்று இந்தியாவின் தேசிய கீதம் ஒலிக்கையில் பந்துவீச்சாளர் சிராஜ், தன்னை மீறி கண் கலங்கினார். இந்திய தேசியக் கீதத்தால் நெகிழ்ச்சியடைந்த சிராஜுக்கு கண்ணீர் வழிந்தோடியது. பின்னர் கைகளால் கண்ணீரைத் துடைத்துக்கொண்ட சிராஜ் உற்சாகமாக விளையாட தொடங்கினார். அது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தாய்நாடு மீதான பற்றை இந்த சம்பவம் பறைசாற்றுவதாக பலரும் சிராஜுக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
இன்றைய முதல் போட்டியில் முதல் விக்கெட்டை வீழ்த்தியதும் சிராஜ் தான். தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய வார்னர் 5 ரன்களில் முகமது சிராஜ் பந்தில் விக்கெட்டை பறிக்கொடுத்தார். இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 93 ரன்கள் எடுத்த நிலையில் மழை குறுக்கிட்டதால் போட்டி பாதிக்கப்பட்டது.
ஆஸ்திரேலியா சென்றடைந்த போதுதான் சிராஜின் தந்தை காலமானார். தந்தையின் இறப்புக்குக் கூட வராமால் இந்திய அணிக்காக கிரிக்கெட் விளையாடும் சிராஜ்,
'நான் கிரிக்கெட் விளையாடினால் தான் அப்பாவுக்கு பிடிக்கும். இந்த தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவை வெற்றி பெற செய்து, அந்த வெற்றியை அப்பாவுக்கு அஞ்சலியாக செலுத்துவேன் ' என சிராஜ் உறுதி ஏற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
✊ #AUSvIND pic.twitter.com/4NK95mVYLN — cricket.com.au (@cricketcomau) January 6, 2021
Loading More post
அறுவைசிகிச்சைக்காக சில நாட்கள் ஓய்வு: கமல் அறிவிப்பு
"தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு” -சென்னை வானிலை ஆய்வு மையம்
செங்கல்பட்டு டோல்கேட்: கூட்ட நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்
பாலக்கோட் தாக்குதல் பற்றி முன்பே அறிந்திருந்த அர்னாப்? கசிந்த வாட்ஸ்அப் உரையாடல்
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!