சென்னை மெரினாவில் படகு பழுதானதால் கடலில் சிக்கித் தவித்த 2 மீனவர்களை தீயணைப்புப் படையினர் விரைந்து சென்று மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
சென்னை, திருவல்லிக்கேணி மாட்டாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள் மீன்பிடித் தொழிலுக்கு சென்று விட்டு நேற்று கரைக்கு திரும்பினர். அப்போது அவர்கள் பயணித்த பைபர் படகு எஞ்சினில் பழுது ஏற்பட்டதால் அலையில் சிக்கிக் கவிழ்ந்தது. இதில் இரண்டு மீனவர்கள் படகுக்கு அடியில் சிக்கிக் கொண்டனர். எஞ்சிய மூன்று மீனவர்கள் நீந்தி கரைக்குத் திரும்பி மெரினா கடற்கரை தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
துரிதமாக செயல்பட்டு, நீச்சல் தெரிந்த 6 தீயணைப்பு படையினர் கடலுக்குள் சென்று, ஆறுமுகம், ஜெயசீலன் ஆகிய 2 மீனவர்களை மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். துரிதமாக செயல்பட்டு மீனவர்களைக் காப்பாற்றிய தீயணைப்பு வீரர்களுக்கு தீயணைப்புப் படை இயக்குநர் சைலேந்திரபாபு வெகுமதி வழங்கி பாராட்டினார்.
Loading More post
"அதிமுகவை மீட்போம்; டிடிவி தினகரனை முதல்வராக்க வேண்டும்" - அமமுக பொதுக்குழு தீர்மானம்
"வாங்க மோடி... வணக்கங்க மோடி.." கொங்கு தமிழில் பாஜகவினரின் வரவேற்பு பாடல்
"நாட்டின் மிகப்பெரிய கலவரக்காரர் மோடி"-மம்தா பானர்ஜி ஆவேசம்
கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து வந்தால் 7 நாள் தனிமை - தமிழக அரசு
ராக்கெட் வேகத்தில் உயரும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை: ஒரே மாதத்தில் ரூ.100 உயர்வு!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!