எதன் அடிப்படையில் தியேட்டர்களுக்கு 100% அனுமதி வழங்கப்பட்டது என்பது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை திருவொற்றியூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கொரோனா பரவல் தமிழகத்தில் எந்த நிலையில் உள்ளது என்பது மருத்துவக் குழுவுக்கு தெரியும். தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவித்ததால் வாழ்வாதாரம் மேம்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பரவலின் வேகம் குறைந்து வருகிறது. உருமாறிய கொரோனாவையும் கட்டுப்பாட்டில் வைத்துள்ளோம். இந்த அடிப்படையில் தான் 100% திரையரங்கம் இயக்க அனுமதி வழங்கப்பட்டது. தியேட்டர்கள் மருத்துவக் கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து அச்சம் கொள்ள தேவையில்லை” என்றார்.
தமிழகத்தில் தியேட்டர்களில் 100% இருக்கைக்கு அனுமதி கொடுத்ததற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் எதன் அடிப்படையில் தியேட்டர்களுக்கு 100% அனுமதி வழங்கப்பட்டது என்பது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
Loading More post
அன்றே கணித்த சுனில் கவாஸ்கர்: 32 ஆண்டுகால ஆஸி.,யின் சரித்திரத்தை தகர்த்த இந்தியா
வாஷிங்டன் சுந்தர், பன்ட் விளாசல்! - டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி
அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா: பொறுப்பேற்கும் முன்பே பைடன் சந்திக்கும் முதல் சவால்!
“சசிகலாவை சேர்க்க முடியாது” -பிரதமரை சந்தித்தபின் முதல்வர் பழனிசாமி பேட்டி
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி
மருத்துவத் துறைக்கு தன்னலமற்ற சேவை வழங்கிய மருத்துவர் சாந்தா கடந்துவந்த பாதை
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?