பொள்ளாச்சி வழக்கில் கைதானதையடுத்து அதிமுக பிரமுகர் அருளானந்தத்தை கட்சியில் இருந்து நீக்குவதாக அதிமுக தலைமை தெரிவித்துள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு இளம்பெண் ஒருவர், தன்னை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக பொள்ளாச்சி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த வழக்கில் ஏற்கெனவே 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது அதிமுக பொள்ளாச்சி நகர மாணவர் அணி செயலாளர் அருளானந்தம், அவரது கூட்டாளிகள் ஹேரன் பால், பாபு என்கிற மைக் பாபு ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் இரவோடு இரவாக கைது செய்துள்ளனர். கைதான 3 பேருக்கும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், பொள்ளாச்சி வழக்கில் கைதான அருளானந்தம் அதிமுக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்யப்படுவதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஒபிஎஸ்சும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ்சும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக திமுக எம்பி கனிமொழி தன்னுடைய ட்விட்டரில், “பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பதை, திமுக தொடர்ந்து சொல்லி வந்துள்ளது. திமுகவின் கூற்று உண்மை என்பதை இன்று, அதிமுகவின் மாணவர் பிரிவின் பொள்ளாச்சி நகர செயலாளரையும், மேலும் இரு அதிமுகவினரையும், சிபிஐ இவ்வழக்கில் கைது செய்துள்ளது உறுதி செய்துள்ளது. எடப்பாடி அரசிடம் இவ்வழக்கு விசாரணை தொடர்ந்திருந்தால் இந்த கைதுகள் நடந்திருக்குமா ?” என்று குறிப்பிட்டுள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பதை, திமுக தொடர்ந்து சொல்லி வந்துள்ளது. திமுகவின் கூற்று உண்மை என்பதை இன்று, @AIADMKOfficial மாணவர் பிரிவின் பொள்ளாச்சி நகர செயலாளரையும்,(1/2)
Loading More post
"தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு” -சென்னை வானிலை ஆய்வு மையம்
செங்கல்பட்டு டோல்கேட்: கூட்ட நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்
பாலக்கோட் தாக்குதல் பற்றி முன்பே அறிந்திருந்த அர்னாப்? கசிந்த வாட்ஸ்அப் உரையாடல்
“விரைவில் நலம் பெறு டீம் இந்தியா” - மைதானத்தில் பதாகையை தாங்கிய இந்திய கிரிக்கெட் ரசிகை!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!