ஒப்பந்த விவசாயத்தில் நுழைவதற்கான திட்டங்கள் முற்றிலும் இல்லை, தாங்கள் எந்த விவசாய நிலத்தையும் வாங்க மாட்டோம் என்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தெரிவித்திருக்கிறது.
பஞ்சாப், ஹரியானாவில் உள்ள தனது செல்போன் கோபுரங்களில் தாக்குதல் நடப்பதாகக் கூறப்பட்டுவரும் நிலையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், விவசாய வணிகம், ஒப்பந்தம் அல்லது கார்ப்பரேட் விவசாயத்தில் நுழைய எந்த திட்டமும் தங்களுக்கு இல்லை என்று தெளிவுபடுத்தியிருக்கிறது.
"ரிலையன்ஸ் ரீட்டெய்ல் லிமிடெட் (ஆர்ஆர்எல்), ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட் (ஆர்ஜேஐஎல்) அல்லது எங்கள் நிறுவனத்தின் வேறு எந்த இணை நிறுவனமும் அதாவது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் சார்பாக கடந்த காலங்களில் எந்தவொரு நிறுவன அல்லது ஒப்பந்த விவசாயத்தையும் செய்யவில்லை, மேலும் இதில் நுழையும் எந்த திட்டமும் இல்லை ”என்று ரிலையன்ஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், செல்போன் கோபுரங்களை தாக்கும் நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவர அதிகாரிகளின் அவசர தலையீட்டை ரிலையன்ஸ் நிறுவனம் கோரியுள்ளது, இது ஆயிரக்கணக்கான ஊழியர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
கார்ப்பரேட் அல்லது ஒப்பந்த வேளாண்மையின் நோக்கத்திற்காக ரிலையன்ஸ் அல்லது எங்கள் துணை நிறுவனங்கள் எந்தவொரு விவசாய நிலத்தையும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பஞ்சாப் / ஹரியானாவில் அல்லது இந்தியாவில் வேறு எங்கும் வாங்கவில்லை. அவ்வாறு செய்ய எங்களுக்கு எந்த திட்டமும் இல்லை. விவசாயிகளிடமிருந்து நியாயமற்ற ஆதாயங்களைப் பெறுவதற்காக ஒருபோதும் நீண்டகால கொள்முதல் ஒப்பந்தங்களில் நுழைந்ததில்லை, மேலும் விவசாயிகளிடமிருந்து உற்பத்தி விலையை விட குறைவாக வாங்கும் செயலை ஒருபோதும் செய்யமாட்டோம் என்று ரிலையன்ஸ் தெரிவித்தது.
ஜியோவுக்கு சொந்தமான 1,500 க்கும் மேற்பட்ட தொலைதொடர்பு கோபுரங்கள் பஞ்சாபில் சேதமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன, இதனால் மாநிலத்தின் பல பகுதிகளில் ஜியோ சேவையில் இடையூறு ஏற்பட்டுள்ளது.
Loading More post
அறுவைசிகிச்சைக்காக சில நாட்கள் ஓய்வு: கமல் அறிவிப்பு
"தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு” -சென்னை வானிலை ஆய்வு மையம்
செங்கல்பட்டு டோல்கேட்: கூட்ட நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்
பாலக்கோட் தாக்குதல் பற்றி முன்பே அறிந்திருந்த அர்னாப்? கசிந்த வாட்ஸ்அப் உரையாடல்
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!