மிருகவதை தடுப்பு தொடர்பாக கடந்த 2017-ஆம் ஆண்டு மத்திய அரசு சார்பில் சேர்க்கப்பட்ட விதிமுறைகளில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளது என்றும் இதனை அரசு சரியாக கையாளவில்லை என்றால் புதிதாக சேர்க்கப்பட்ட விதிமுறைகளுக்கு தடை விதிக்க நேரிடும் எனவும் உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மிருகவதை தடுப்பு தொடர்பாக கடந்த 2017-ஆம் ஆண்டு ஏற்கெனவே இருக்கக்கூடிய சட்ட விதிமுறைகளில் புதிய விதிகளை மத்திய அரசு சேர்த்திருந்தது. இதற்கு எதிராக எருமை விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ் ஏ பாப்டே தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'சட்டத்திற்கு உட்பட்டுதான் மாடுகள் மற்றும் எருமைகளை விற்கப்படுகின்றது. அவ்வாறு விற்பனைக்காக மாடுகளை ஏற்றி வரும் வாகனங்களை சிலர் பறிமுதல் செய்வதோடு, மாடுகள் மற்றும் எருமைகளை வலுக்கட்டாயமாக பிடுங்கி கோசாலைகளில் ஒப்படைக்கின்றனர். இதனால் இந்த தொழிலில் ஈடுபட்டிருக்க கூடிய ஏராளமானோர் பெரும் பிரச்னைகளை சந்திக்கின்றனர்' எனத் தெரிவித்தார்.
அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், எந்தெந்த காரணங்களுக்காக விலங்குகள் மீட்கப்படுகின்றது என்பதை சட்டம் தெளிவாகக் கூறியுள்ளது என தெளிவுபடுத்தினார். மேலும் வாகனங்களில் கொண்டு வரப்படும் விலங்குகள் பல துன்புறுத்தல்களை அனுபவிக்கின்றன என்பதற்கான ஆதாரங்கள் உள்ளது எனவும் அவர் கூறினார்.
அப்போது பேசிய தலைமை நீதிபதி, 'பல விலங்குகள் மனிதர்களின் வாழ்வாதாரத்தை அடிப்படையாக கொண்டு இருக்கின்றது. அவற்றை நீங்கள் தேவையில்லாமல் பறிமுதல் செய்ய முடியாது. மேலும் அரசு கொண்டுவந்த விதிமுறைகளில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன. இந்த முரண்பாடுகளை மத்திய அரசு சரியாக கையாளாவிட்டால் 2017ஆம் ஆண்டில் நீங்கள் கொண்டு வந்த புதிய விதிமுறைகளுக்கு நாங்கள் தடை விதிக்க நேரிடும்” எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.
மேலும் இதுதொடர்பான சட்டத்தை உடனடியாக முறையாக அமல்படுத்த வேண்டும் எனவும் ஒருவர் மீது மிருகவதை தொடர்பான குற்றம் நிரூபிக்கப்பட்டால் மட்டுமே விலங்குகளை பறிமுதல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தனர்
Loading More post
காட்டு யானையுடன் செல்ஃபி: யானை தாக்கி இளைஞர் உயிரிழப்பு!
அரசியல் கட்சிகளோடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று ஆலோசனை
கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் பிரதமர் மோடி!
மீண்டும் ரூ.25 உயர்வு.. ராக்கெட் வேகத்தில் உயரும் LPG விலை: மக்கள் அதிர்ச்சி!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு: நள்ளிரவில் அமித்ஷாவுடன் 3 மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தை
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி