தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தப்படும் குரூப் - 1 தேர்வு வினாத்தாளில் ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் தொடர்பான கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தும் குரூப் 1 தேர்வானது இன்று நடைபெற்றது. 66 காலி பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட இந்தத் தேர்வில் தமிழகம் முழுவதிலும் உள்ள இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.
இந்நிலையில், இன்று கேட்கப்பட்ட குருப் 1 வினாத்தாளில் ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அந்தக் கேள்வியானது, “தலைசிறந்த படைப்பான “ பரியேறும் பெருமாள்” என்ற தமிழ் திரைப்படம் பற்றிய விமர்சனம் குறித்த கீழ்காணும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்யவும்” என அமைந்துள்ளது. இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த அந்தப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ், “ “பரியேறும் பெருமாள் என்கிற படைப்பின் நோக்கம் முழுமையடைந்தது ;இது மானுட சமூகத்தின் பிரதி’ ” என்று அவரது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இவைத் தவிர பெரியார், காமராஜர், அம்பேத்கர், திராவிடம், கீழடி, வேள்பாரி, தமிழர் நாகரிகம் தொடர்பான கேள்விகளும் இடம்பெற்றுள்ளன.
Loading More post
கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி
ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: காய்கறிக் கடைகள், தியேட்டர்கள் இயங்கத் தடை
தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு!
“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு அமல்” - தமிழக அரசு
மேக்ஸ்வெல்-டிவில்லியர்ஸ் அதிரடி! கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு!
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி