BOONIE BEARS
BOONIE BEARSBOONIE BEARS

BOONIE BEARS | தாய் மேல் சத்தியம் தான்... என்ன கரடி வெர்சன்..!

மனிதர்களாக இருந்தாலும் விலங்குகளாக இருந்தாலும் தாய்ப்பாசம் என்பது ஒரே விதத்திலான உணர்வை உள்ளடக்கியது என்பதை கரடிகளை முக்கிய கதாபாத்திரங்களாக்கி எடுத்து காட்டியிருப்பது அசத்தல்தான்.
BOONIE BEARS(3 / 5)

பூனி பியர்ஸ் சீன அனிமேஷன் திரைப்படத் தொடரில் இது ஒன்பதாவது பதிப்பு. ஒரு இரவு காட்டுத் தீயின் போது இரண்டு கரடி குட்டிகள் அவற்றின் தாயால் கைவிடப்படுகின்றன. அக்கரடி குட்டிகள் பெரிய சைஸ் கரடிகளான பிறகு தன் தாயை பற்றிய துப்பு கிடைக்க.. தன் தாயையும், நடந்த உண்மை என்னவென்றும் கண்டறிய புறப்படுகின்றனர். அந்தப் பயணம் எப்படிப்பட்டது என்பதுதான் BOONIE BEARS: GUARDIAN CODE படத்தின் கதை.

ப்ரையர் மற்றும் ப்ராம்பிள் தன் தாயை பிரிந்தபிறகு, விரைவில் அவர் திரும்புவார் என்று நம்புகின்றனர். இருவரும் நன்கு வளர்ந்த பிறகு நண்பர் லாகர் விக்குடன் ஒரு ரோபோ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு செல்கின்றனர்., ​​அங்கு இளம் விஞ்ஞானியான சார்லோட்டை சந்திக்கிறார்கள். மேலும் அவர்களின் தாய் கரடி தொடர்பான துப்பு ஒன்றை கண்டறிய., அவள் காணாமல் போனதைச் சுற்றியுள்ள அனைத்து பதில்களும், மர்மங்களும் வெளிவர தொடங்குகிறது.

ப்ரையர் மற்றும் ப்ராம்பிள் தன் தாயை சந்திக்க, நாட்கள் உற்சாகமாக கடக்கிறது., ஆனால் அந்த உற்சாகத்தை கெடுக்கும்படி சில சம்பவங்கள் நடக்கின்றது. அப்போது அந்த தாய் கரடி நிஜ கரடியல்ல; ரோபோ என்பது தெரியவருகிறது. இப்படி நகரும் கதையில், ப்ரையர் மற்றும் ப்ராம்பின் தாய் கரடிக்கு என்னாச்சு...? கரடியை போன்ற ரோபோவை உருவாக்கியது ஏன்..? என்ற கேள்விகளுக்கு அசத்தலான ஃப்ளாஷ்பேக் மூலம் பதில் சொல்கின்றனர். அக்கரடிகளின் நிஜ தாய் கிடைத்ததா இல்லையா என்பதே கிளைமாக்ஸ்.

படத்தின் முதல் பாதி நகைச்சுவையாகவும் சாகசமாகவும் இருக்கிறது, பிரையர் மற்றும் பிராம்பிள் ரோபோக்களைப் போல நடித்து, அச்சுறுத்தும் ஸ்க்ராப் ரெபெல் கும்பலை எதிர்கொள்கிறார்கள், ஒரு வெறி பிடித்த லியோனார்ட் அவர்களின் தலைவராக இருக்கிறார்.

இரண்டாம் பாதியில் ஃப்ளாஷ்பேக்குகள் மூலம், கதை உணர்ச்சிகரமான தருணங்களுக்கு மாறுகிறது. படத்தின் தனித்துவமான அம்சம் அதன் நன்கு வடிவமைக்கப்பட்ட அனிமேஷன் ஆகும்.

போர்வீரனாக இருந்தாலும், ரோபோவாக இருந்தாலும், தாயாக இருந்தாலும் ஒவ்வொரு அவதாரத்திலும் தாய் கரடி ஜொலிக்கிறார். ஒரு புதிய தாயாக வாழ்க்கையை வழிநடத்தும் அவரது காட்சிகள் அழகாகவும், வேடிக்கையாகவும் உள்ளன.


அனிமேஷன் திரைப்படம் என்றாலே அது குழந்தைகளின் ஹிட்லிஸ்ட்டில் நிச்சயம் இடம்பிடித்துவிடும். ஆனால் இக்கதையில் அதிரடி சண்டைக் காட்சிகள் அதிகமாக உள்ளதால் கைகொடுக்குமா என்று தெரியவில்லை.

மனிதர்களாக இருந்தாலும் விலங்குகளாக இருந்தாலும் தாய்ப்பாசம் என்பது ஒரே விதத்திலான உணர்வை உள்ளடக்கியது என்பதை கரடிகளை முக்கிய கதாபாத்திரங்களாக்கி எடுத்து காட்டியிருப்பது அசத்தல்தான்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com