“கூட்டம் அலைமோதுகிறது.. கனவிலும் ஸ்டார் ஒளிர்கிறது” - STAR பட இயக்குநர் நெகிழ்ச்சி அறிக்கை!

ஸ்டார் திரைப்படத்தின் இயக்குநர் இளன், திரைப்படத்தின் பெரும் வெற்றியை அடுத்து நெகிழ்ச்சியான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
elan, kavin, star
elan, kavin, starpt web

கவின் நடித்துள்ள ஸ்டார் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக திரையில் ஓடிக்கொண்டுள்ளன.

Star
Star

ப்யார் ப்ரேமா காதல் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் இளன் இயக்கியுள்ள திரைப்படம் ஸ்டார். கவின் நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் மே 10 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. சில கலவையான விமர்சனங்களும் வந்தன. இன்னும் சிறப்பாக கொண்டு வந்திருக்க வாய்ப்பிருந்ததாகவும், அப்படி செய்திருந்தால் மறக்க முடியாத ஹிட் ஆக அமைந்திருக்கும் என்றும் சில விமர்சகர்கள் கூறினார்கள்.

சென்னையிலுள்ள திரையரங்கு ஒன்றிற்கு படம் பார்க்க சென்ற கவினுக்கு ரசிகர்கள் ஆரவராத்துடன் வரவேற்பு அளித்தனர். திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் ஸ்டார் திரைப்படத்திற்கு கூடுதலாக காட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்திருந்தது.

நம்பிக்கைக்கு நன்றி. கூட்டம் அலைமோதுகிறது.

இந்நிலையில், இயக்குநர் இளன் நெகிழ்ச்சியுடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “முதல் நாள் காட்சியில், முகம் அறியா சகோதரன் ஒருவன் ஓடி வந்து கேட்டான் : உங்கள கட்டி புடிச்சுக்கலாமா? அந்த இரு கணம் அன்பு மட்டுமே வெளிப்பட்டது.

ஓர் கணவனும் மனைவியும், திரையரங்கை விட்டு விலகவே இல்லை . தேம்பி தேம்பி அழுதாள், நானும் அழுதேன். அந்த கண்ணீரும் அன்பே.

திரையரங்கை சுத்தம் செய்யும் பணி பெண், கன்னத்தை பிடித்து சுத்திப்போட்டது என் தாயின் அன்பை வெளிப்படுத்தியது.

KAVIN  STAR
KAVIN STAR STAR

பல இடங்களில் கைதட்டலும், கரகோஷமும் "லவ் யூ" என்று சொல்வதாகவே தோன்றியது.

இறுதிக்காட்சியின் வரவேற்பு என்னுள் உள்ள எழுத்தாளனை இன்னும் தைரியசாலியாக மாற்றியுள்ளது.

ரோலிங் கிரெடிட்ஸ் போட்டவுடன் எழுந்து செல்வதே வழக்கம். ஆனால், நான் கண்டதோ காதலியை விட்டு பிரிந்து செல்ல மனமில்லாத காதலர்களைதான்.

ஒரு சில (பல) விமர்சனங்கள், நான் ஒரு கலைஞனாய் மெருகேற உதவுகிறது.

நம்பிக்கைக்கு நன்றி. கூட்டம் அலைமோதுகிறது. பகலிலும், மதியத்திலும், இரவிலும் சிலரின் கனவிலும் ஸ்டார் ஒளிர்கிறது” என நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.

கலெக்‌ஷன் எப்படி?

என்னதான் அரண்மனை 4 திரைப்படம் இரண்டாவது வாரமும் நன்றாக ஓடும் பொழுதிலும், ஸ்டார் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கவே செய்தது. முதல் நாளில் ரூ.3 கோடி வசூல் ஈட்டிய ஸ்டார், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தலா 4 கோடி ரூபாய் என மொத்தம் ரூ12 கோடியை வசூலித்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com