மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு| குற்றப்பத்திரிகையில் ஆம் ஆத்மியை இணைக்கும் ED!

புதிய மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கின் குற்றப்பத்திரிகையில் ஆம் ஆத்மி கட்சியின் பெயர் இணைக்கப்படவிருப்பதாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது
aap, ed
aap, edtwitter

புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தலைவர்கள் சிலர், அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அந்த வகையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

தற்போது அவர் இடைக்கால ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்த நிலையில், புதிய மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கின் குற்றப்பத்திரிகையில் ஆம் ஆத்மி கட்சியின் பெயர் இணைக்கப்படவிருப்பதாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: உயிருக்குப் போராடிய கணவர்.. பார்க்கப் புறப்பட்ட மனைவி.. விமானம் ரத்தானதால் நிகழ்ந்த சோகம்!

aap, ed
மதுபானக் கொள்கை முறைகேடு: மணீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

புதிய மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில், டெல்லி முன்னாள் துணை முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான மணீஷ் சிசோடியாவும் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் உள்ளார். அவருடைய ஜாமீன் மனுவை, டெல்லி உயர் நீதிமன்றம் விசாரித்து வருகிறது. அம்மனு, இன்று விசாரணைக்கு வந்தபோது அமலாக்கத் துறை தரப்பில் கடுமையான எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. “மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். அதில், ஆம் ஆத்மி கட்சியின் பெயரும் சேர்க்கப்படவிருக்கிறது. மதுபானக் கொள்கை மூலம் பணம் முறைகேடு செய்யப்பட்டு ஆம் ஆத்மி கட்சி அதன் மூலம் பலன்பெற்றுள்ளது. அதாவது, ஆம் ஆத்மி கட்சி முறைகேடாக பணம் ஈட்டியதில் மணீஷ் சிசோடியாக முக்கியப் பங்காற்றியுள்ளார்” என்று அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணீஷ் சிசோடியா
மணீஷ் சிசோடியாட்விட்டர்

இதையடுத்து, விசாரணையை மே 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம், பிஆர்எஸ் தலைவர் கே.கவிதாவின் நீதிமன்றக் காவலையும் அதே தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிக்க: முதல்வரின் தனி உதவியாளர் தாக்கியதாக ஆம் ஆத்மியின் ஸ்வாதி மாலிவால் புகார் - டெல்லி அரசியலில் பரபரப்பு

aap, ed
8 மணி நேர விசாரணைக்குப் பின் மணீஷ் சிசோடியாவை கைது செய்தது சிபிஐ.. பின்னணி என்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com