aranmanai 4 vs star
aranmanai 4 vs starpt

வசூலில் நின்று பேசும் அரண்மனை.. தாக்குப்பிடிக்குமா கவினின் ஸ்டார்?

கோடை விடுமுறையில் கவனிக்கத்தக்க படங்களாக அரண்மனை 4 மற்றும் ஸ்டார் படங்கள் வெளியாகியுள்ள நிலையில், அவற்றுக்கு கிடைத்த வசூல் மற்றும் வரவேற்பு உள்ளிட்டவற்றை பார்க்கலாம்.
Published on

சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை படங்களின் வரிசையில் 4வதாக வெளியாகியுள்ள படம் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் ஓடிவருகிறது. அரண்மனை பாகங்களிலேயே இந்த படம் நன்றாக இருப்பதாக இளசுகள் முதல் குடும்பங்கள் வரை கூறுவதை கேட்க முடிகிறது. மே.3-ம் தேதி வெளியான அரண்மனை படம் இரண்டாவது வாரத்திலும் பெரும்பாலான தியேட்டர்களில் திரையிடப்பட்டு வருகிறது.

புது தேர்வாக தமன்னா, ராஷி கண்ணா ஆகியோர் படத்தில் நடித்திருப்பதும், ஒருசில காமெடிகள் கைகொடுத்ததும் குறிப்பாக அண்ணன் - தங்கை செண்டிமெண்ட் வொர்க் அவுட் ஆனதும் படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்தது. அதன்படி, முதல் நாளிலேயே சுமார் 7 கோடி வசூலை கடந்ததாக கூறப்படுகிறது.

aranmanai 4 vs star
அட்சய திருதியில் அபூர்வ ஆஃபர் கொடுத்து மாட்டிக்கொண்ட நகைக்கடை உரிமையாளர்

கோடை விடுமுறையில் வெளியாகியுள்ளதால், படத்திற்கு கிடைத்த நல்ல விமர்சனங்களாலும் இதுவரை 50 கோடி வசூலை நெருங்கியதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, நேற்றைய தினம் வெளியான கவினின் ஸ்டார் படம், பெரும் எதிர்பார்ப்பு காரணமாகவே முதல் நாளிலேயே சுமார் 5 கோடி ரூபாய் வசூலை கடந்தது. டாடா படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக மாறியுள்ள கவினின் ஸ்டார் படம், எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்ற பேச்சுகள் இருந்தாலும், கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

வார விடுமுறை என்பதால் பெரும்பாலான தியேட்டர்களில் ஸ்டார் படத்தைப் பார்க்க ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் இளன், கவினை ஸ்டாராக்க முயற்சிக்கும் காட்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம் என்ற கருத்துகளும் மேலோங்கியுள்ளது. கோடை, வார விடுமுறை என்று இருக்கும் நேரத்தில் இரு படங்களின் வசூல் எவ்வாறாக மாறும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

aranmanai 4 vs star
ஒசூர்: கால்நடைத் தீவன தொழிற்சாலைக்குள் கஞ்சா செடிகள்- வடமாநில தொழிலாளி கைது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com