திருமண உறவில் இருந்து விலகுவதாக ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி அறிவிப்பு!

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், பாடகி சைந்தவி தம்பதி பிரிந்து வாழ உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார்
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார்முகநூல்

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷூம் அவரது மனைவி சைந்தவியும் விவகாரத்து பெறவுள்ளதாக கடந்த சில நாட்களாகவே இணையத்தில் தகவல்கள் பரவிவந்தன. இந்தநிலையில், இருவரும் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில், தங்கள் பிரிவை அதிகாரப்பூர்வமாக நேற்று இரவு அறிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”11 வருட திருமண உறவில் இருந்து நாங்கள் விலகுவதாக முடிவு செய்திருக்கிறோம். எங்களின் மன அமைதிக்காகவும், நன்மைக்காகவும் இந்த முடிவை இணைந்து எடுத்துள்ளோம்.

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார்
“கூட்டம் அலைமோதுகிறது.. கனவிலும் ஸ்டார் ஒளிர்கிறது” - STAR பட இயக்குநர் நெகிழ்ச்சி அறிக்கை!

இந்த நேரத்தில் நண்பர்களும், ரசிகர்களும் எங்களது தனிப்பட்ட வாழ்க்கையை மதிக்க வேண்டும். இந்த முடிவு எங்களது இருவருக்கும் சிறந்ததாக அமையும் என்று நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com